நாம் தினமும் இணையத்தை பலதரப்பட்ட காரணிகளுக்காகப் பயன்படுத்துகிறோம்..கும்பகோணத்தில் இருந்துகொண்டு குலாலம்பூருக்கு ஒரு நொடியில் பேசிவிட முடிகிறது, உலகத்தின் எந்த மூலையும் நம்மால் எளிதாய் தொடர்புகொள்ள முடிகிறது..இப்படிப் பட்ட இணையம் இரண்டே இரண்டு எங்களால் மட்டுமே இயங்குகிறது 0,1. இது எப்படி சாத்தியம் ஆகிறது என யோசிக்கும் உங்களுக்காகவே இந்தத் தொடர் பதிவு.
இணையம் என்பது முதலில் ஆர்ப்பா நெட் என்னும் அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டிற்காகவும், அவர்களுக்குள் தொடர்புகொள்ளவும் உருவாக்கப் பட்டது
இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது எனப் புரிந்துகொள்வதற்கு முன் அதன் அடிப்படை கருவிகளும் அதன் செயல் பற்றியும் தெளிவான அறிவு பெற வேண்டும், அதில் மிக முக்கியமான கருவி connecting cables, இந்த இணைப்பு கேபிள் கொண்டே பெரும்பாலான இன்டர்நெட் வேலை செய்கிறது, இது முக்கியமாக 3 வகை உள்ளது
1. கோஅக்ஸ்(COAX)
2. பைபர் (FIBER)
3. ட்விஸ்டட் பேர்(TWISTED PAIR)
1. கோஅக்ஸ்(COAX)
இது காப்பர் எனப்படும் செம்பை கடத்தியதாக பயன்படுத்தி செயல்படும் ஒன்று, வீட்டு கேபிள் டிவியில் இந்தக் கேபிள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படும். மேற்கூறியதுபோல் பூஜியம் என்பதை இந்த செம்புக் கம்பியின் மூலம் எதுவும் கடத்தாமல் இருந்தால் அடுத்த முனையில் உள்ள இயந்திரம் புரிந்துகொள்ளும், அதுவே இந்தக் கம்பியில் +5 வோல்ட் மின்சாரம் கடத்தப் பட்டால் அதனை 1 என மறு முனையில் உள்ள இயந்திரம் புரிந்துகொள்ளும்
2. பைபர் ஆப்டிக்ஸ்
இது கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்கை கடத்தியாக பயன்படுத்தி செயல்படும் ஒன்று, இதன் செயலை விளக்க ஒரு சின்ன சினிமா துணுக்கு ஒன்றுள்ளது...மம்மி படத்தில் அவர்கள் பிரமிட்குள் செல்லும்பொழுது இருட்டாக இருக்கும்...அப்போது ஒரு கண்ணாடியை தெரியாமல் திரும்புவார்கள் அதில் படும் சூரிய வெளிச்சம் இன்னொரு கண்ணாடிக்கு கடத்தி சென்று அதிலிருந்து இன்னொரு கண்ணாடிக்கு சென்று ..அந்த அரை முழுவதும் வெளிச்சம் பரவி விடும்...இதே தொழில்நுட்பம் கொண்டே இந்த பைபர் ஆப்டிக்ஸ் செயல்படுகிறது. இதில் ஒளி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு கடத்தப்பட்டால் 1 அல்லது 0 எனத் தகவலை கடத்தப் படுகிறது
3. ட்விஸ்டட் பேர் (TWISTED PAIR)
இது கோஅக்ஸ் கேபிளில் ஏற்படும் சிக்னல் இழப்பீடுகளை சரி செய்ய உருவாக்கப்பட்ட ஒன்று, இதில் இரு பிளாஸ்டிக் கொண்டு காப்பீடு(insulate) செய்யப்பட்ட காப்பர் கேபிள்கள் இரண்டு பின்னப்பட்டிருக்கும்..இப்படி பின்னப் படுவதனால் மற்ற சிக்னலின் இடைஞ்சல்கள் தவிற்கப்படும். இதில் கவசமிடப் படாத ட்விஸ்டட் பேர்(Unshielded twisted pair) மற்றும் கவசமிட்ட ட்விஸ்டட் பேர்(shielded twisted pair) என இருவகைப் படும்.
பெரும்பாலும் கவசமிடப் படாத ஒன்றையே நாம் அன்றாடம் பயன்படுத்துவோம், அப்படிப் பயன்படுத்தும் ஒன்றில் இன்றியமையாதது ஈதர்நெட்(ethernet)
உங்கள் கணினியிலோ, மடிக்கணினியிலோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல் ஒரு துளை இருந்தால் அதுவே ஈதர்நெட் போர்ட்.
ஈதர்நெட் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பாப்போம்

No comments:
Post a Comment