என்னைப் பொறுத்தவரையில் இன்டர்நெட் செயல்பட முக்கியமானத் தேவை என்னவெனக் கேட்டால், நான் ஈதர்நெட் என்றே பதில் கூறுவேன். அப்படி இன்றியமையாத ஒன்று தான் இந்த ஈதர்நெட்.
இது முன் கூறியது போல் ட்விஸ்டட் பேர் கேபிள் கொண்டே உருவாக்கப் படுகிறது, இதில் இதுவரை 8 வகையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் அடைந்துள்ளது(CAT1-CAT8)
1.CAT 1
இதுவே தொலைபேசிகளை இணைக்க பயன்படுத்துவது, இதனுள்ளில் மொத்தம் 4 தனி காப்பர் வயர்கள் இருக்கும், இதில் தகவல் (DATA) பரிமாற்றம் செய்ய இயலாது
2. CAT 2
இதன் மூலமே தகவல் பரிமாற்றங்கள் ஆரம்பித்தன. இது 4 Mbps வேகத்திற்கு தகவலை பரிமாறும் திறமை படைத்தது.Mbps என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன கணக்கு தெரிந்தால் போதும். நம்முடைய ரூபாயை எப்படிக் கூட்டுகிறோமோ அதாவது 10 ஒரு ரூபாயை 10 ரூபாய் எனவும் 1000 ஒரு ரூபாயை ஆயிரம் எனவும் ஒரு மதிப்பீடு செய்கிறோம் அல்லவா , அதே போல் தகவல் பரிமாறத் தேவையான 1 மற்றும் 0 வை அளக்க இந்த முறை பயன்படுத்தப் படுகிறது.
1 பிட் (0 அல்லது 1)
10 பிட் = 1 * 10
1000 பிட் = 1 கிலோ பிட்
1000 கிலோ பிட் = 1 மெகா பிட் = 1000*1000 பிட்
Image courtesy: Wikipedia.com
ஆக நமது கேட் 2 கேபிள் ஒரு நொடியில் 4 மெகா பிட் அளவு கொண்ட டேட்டாவை கடத்தும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. Mbps= Mega bits per second)
மற்ற கேபிள் பற்றி கீழ்கொடுக்கப் பட்டிருக்கும் அட்டவணை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்
இப்போது நம் பயன்பாட்டில் உள்ளது cat 5, cat 5e மற்றும் cat 6, இவற்றின் வடிவம் மற்றும் தொழில் நுட்பம் பற்றிப் பார்ப்போம்
கேட் 5, 6, 6e
இதனுள் மொத்தம் 8 தனி காப்பர் கேபிள்கள் ஜோடியாக பின்னப்பட்டிருக்கும், மொத்தம் 4 ஜோடிகள்
இப்போது இந்தக் கேபிளை கணினியுடன் இணைக்கும் பாலமாக ஈதர்நெட் கார்டு பற்றிப் பாப்போம்.
IEEE என்னும் அமைப்பு உள்கட்டமைப்பு இணைப்புகளுக்காகவே (LOCAL AREA NETWORK) உருவாக்கிய தரநிலை எண் 802. அதில் இந்த ஈதர்நெட்டிற்கு வகுக்கப் பட்டது 802.3. இந்த ஸ்டாண்டர்ட் சொல்லும் விதிகளுக்கு உட்பட்டே ஈதர்நெட் கேபிள்கள், கார்டுகள் தயாரிக்க வேண்டும்.
ஈதர்நெட் கார்டுகள் தயாரிக்கும் வேளையில் ஒரு கார்டுக்கும் மற்றொரு கார்டுக்கும் வித்யாசம் அறிந்துகொள்ளவும், ஒரு கார்டை எளிதாக அடையாளப்படுத்தவும் ...ஆதார் எண் போல் அதற்கும் ஒரு குறியீடு அளிக்கப்பட்டு அதை உருவாக்கும்பொழுதே அதன் ரோம்(ROM) எனப்படும் மெமரியில் இணைக்கப்படும், அதன் பெயரே மேக் அட்ரஸ் (MAC ADDRESS).
மேக் அட்ரஸ் பற்றியும், பரிமாற்றத்திற்கு தேவைப்படும் சுவிட்ச்(SWITCH), ஹப்(HUB) போன்ற மற்ற சாதனங்கள் பற்றி அடுத்தப் பதிவில் காண்போம்
No comments:
Post a Comment