ஒரு ஈதர்நெட் கேபிள் வழியாக நம்முடைய தகவலை அனுப்பும்பொழுது அது இன்னொருவருக்கு நாம் அனுப்பும் விதமே சென்றடைகிறதென சரியாக கூறமுடியாத நிலை இருந்தது..அதுபோக ஒவ்வொரு முறையும் அடுத்தவர் டாட்டாவை அனுப்பும் வரைக் காத்திருந்து அதன்பின் நம்முடைய டேட்டாவை அனுப்ப நேரமெடுத்தது .அதுமட்டுமல்லாமல் சிக்னல் நடுவில் தடைபடுவதால் டாட்டா தொலைந்துகொண்டே வந்தது...இதனை சரி செய்யவே பிரேம் (Ethernet Frame) என்னும் ஒரு வரைமுறையை உண்டாக்கினார்
ஒரு ஈதர்நெட் பிரேம் என்பது மொத்தம் 64 பைட்(byte) கொண்டது, இதில் எங்கு அந்த பிரேம் செல்லவேண்டுமென்னும் இலக்கும்(destination) மேக் அட்ரஸ் மற்றும் எங்கிருந்து வருகிறது என்னும் மூலமும்(Source) மேக் அட்ரஸ்ஸும் என்னமாதிரியான ஈதர்நெட் பிரேம் என்பதைக் குறிக்க டைப் பீல்டு (Type Filed), டேட்டாவை அனுப்ப டாட்டா பீல்டு, மற்றும் மேற்கூறிய காத்திருக்கும் பிரச்னையை சரி செய்ய பிரேம் செக் சீக்குவ்னஸ் (Frame Check Sequence) என்னும் பீல்டு உள்ளது.
ஒரு ஈதர்நெட் கேபிள் வழியாக ஒரு பாக்கெட் செல்ல வேண்டி இன்னொரு பாக்கெட் காத்திருக்காமல் இருக்க ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் ஒரு வரிசை எண் அளிக்கப்படும்.இதன் மூலம் அந்தப் பிரேமை பெறுபவர் அந்த எண்ணை வைத்து வரிசைப் படுத்தி எளிதில் இனம்கண்டுகொள்வர் ..அதுமட்டுமல்லாமல் FCS தொழில்நுட்பம் மூலம் ஒரு ஒரு பிரேமை அனுப்பும் முன் அந்தப் பிரேமை வைத்து சிறு கோட் வோர்ட் ஒன்றை உருவாக்குவார் ...அந்தக் கோட் வோர்டை அந்த பிரேமை பெரும் கணினி டீகோட் செய்யும்...அப்படி செய்யும் பொழுது அந்த வார்த்தையும் அனுப்புனர் அனுப்பிய வார்த்தையும் ஒன்றாக இருந்தால் ...அனுப்பிய தகவல் நடுவில் எந்தத் தொந்தரவும் மாற்றமும் இல்லாமல் செய்தி வந்தடைந்தது என உறுதிப்படுத்தும்.
இப்படி ஒரு ஸ்விட்சில், அதனுடன் இணைக்கப்பட்ட கருவிகளுக்குள் எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது...காலம் செல்ல செல்ல ..இந்த நெட்ஒர்க் பெரிதாக ஆரம்பித்தது..அப்போது வெவேறு நெட்ஒர்க்குகளை இணைக்க ஒரு கருவி தேவைப் பட்டது..அந்தத் தேவையை பூர்த்தி செய்யவே ரவ்ட்டர் (Router) பிறந்தது. ரௌட்டர் பற்றி அடுத்தப் பதிவில் பாப்போம்.
No comments:
Post a Comment