Thursday 26 July 2018

மேக் அட்ரஸ்(MAC ADDRESS)



நம் எல்லோருக்கும் எப்படி ஒரு தனி முகவரி இருக்கிறதோ அதுபோல் இணையம் செயல்படப் பயன்படும் அணைத்து கருவிகளுக்கும் தனி முகவரி தேவை, அதனை பூர்த்திசெய்யவே இந்த மேக் அட்ரஸ் பிறப்பெடுத்தது.  நாம் நமக்குள் உணர்வுகளை, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மொழியைப் பயன்படுத்துவதுபோல்..இந்த கருவிகள் மற்ற கருவியிடம் உரையாட ஒரு மொழி கட்டமைப்பை உருவாக்கியது ISO(International Organization for Standardization)..அந்த திட்டத்திற்கு OSI(Open Systems Interconnection) எனப் பெயர் சூட்டியது, அந்தக் கட்டமைப்பை நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் இந்தக் கருவிகள் பேசும் மொழியை புரிந்துகொள்ள முடியும்.


முதலில் இந்த மேக் அட்ரஸ்ஸின் வரையறை பற்றிப் பாப்போம், இது மொத்தம் 48 பிட்டுகள் கொண்டது 8 பிட்டை 1 அக்டேட் எனக் கூறுவர்...ஆக மேக்  அட்ரஸ் என்பது 8 ஆக்டேட் கொண்டது.உங்களுடையக் கணினியின் மேக் அட்ரஸ் தெரிந்துகொள்ளும் விதம் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்து வேறுபடும். விண்டோஸ் சிஸ்டம்களில் கமண்ட் ப்ராம்ப்ட் ஓபன் செய்து ipconfig /all என டைப் செய்தால் ...மிக நீண்ட பதில் வரும் அதில் நம்முடைய நெட்ஒர்க் (ஈதர்நெட்-ஆகவோ அல்லது வயர்லெஸ்-ஆகவோ இருக்கலாம்) அந்த தலைப்புக்கு கீழ் உள்ள பிஸிக்கல் அட்ரஸ் (Physical Address) அருகில் உள்ள 8 ஆக்டெட்தான் உங்களது மேக் அட்ரஸ்



இந்த மேக் அட்ரஸ் வைத்தே உங்களுடைய கணினியை மற்ற கருவிகள் மிக எளிதாக இனங்கண்டு, உங்கள் கருவி இருக்கும் இடத்தையும் கண்டுகொள்ளும்.தற்போது இரு கணினிகள் பேச நினைத்தால் ஒரு ஈதர்நெட் கேபிள் கொண்டு இணைத்துவிடலாம், இதுவே இரண்டிற்கும் மேற்பட்ட கணினிகள் பேச நினைக்கும் பொழுது ...அவை அனைத்தும் ஒரே தொடர்பில் இருக்கவைப்பது ?

இவைகளுக்கு பதில் கூறவே ஹப் எனப்படும் கருவியை உருவாக்கினார்கள். இந்த நெட்ஒர்க் ஹப் பலக் கணினியை ஒரே தொடர்பில் இணைத்து, அவைகளுக்குள் பேசிக்கொள்ள உதவும் கருவியாய் அமைந்தது. ஆனால் இதற்கு ஒரு தகவல் ஒரு கணினியில் இருந்து வந்தால் அதனை எல்லாக் கணினிகளுக்கும் அனுப்பிவிடும், சுருக்கமாக சொன்னால் நம்மூர் தெருவில் உக்கார்ந்திருக்கும் மூதாட்டிகளைப் போல்..இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்



பிரெட் என்பவன் பெட்டி என்பவளுக்கு பிரியமாய் ஏதோ அனுப்புகிறான் ..ஆனால் இந்த நெட்ஒர்க் ஹப் அதை எல்லாரிடமும் கூறிவிட்டது. இந்தப் பிரச்னையை சரி செய்யவே சுவிட்ச் என்னும் கருவி உருவாக்கப்பட்டது



இந்த சுவிட்ச் என்பது அதன் ஒவ்வொரு போர்ட்டிலும்(Port) எந்தக்  கருவி உள்ளதென தனது அட்டவணையில்(MAC TABLE) அந்தக் கருவியின் மேக் அட்ரஸ்ய்யும், அந்தக் கருவி இணைக்கப் பட்டிருக்கும் ஈதர்நெட்  போர்ட் எண்ணையும் இணைத்துக் குறித்து வைத்துக் கொள்ளும். ஒரு தகவலை வாங்கும்பொழுதே யாருக்கு அனுப்பவேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டு, அந்த அட்டவணையில் எந்த ஈதர்நெட் போர்ட்டில்  குறிப்பிடப்பட்ட மேக் அட்ரஸ் உள்ளதோ அதற்கு மட்டும் அந்த செய்தியை அனுப்பும்.


இரவு 8 முதல் 9 வரை நியூஸ் சேனல் பார்ப்பதுண்டா, அப்படி பார்ப்பீர்களானால் நான் அடுத்துக்  கூறப் போகும் பிரச்னையை எளிதில் புரிந்துகொள்வீர்...ஒரு 5 பேர் உக்காத்துகொண்டு ஒரு தலைப்பில் விவாதம் செய்வர் ...அப்போது ஒருவரை இன்னொருவர் பேச விடாமல் செய்வதென நினைத்துக் கொண்டு சத்தமாக பேசிப் பேசி பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியாமல் வெறும் சத்தம் மட்டுமே காதில் விழும்.அளவுக்கு சென்று வெளிநடப்பு செய்வர்...இப்படிப் பட்ட பிரச்சனை ஒரே நெட்ஒர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும் கணினிகளுக்குள்ளும்  வரும் அதன் பெயரே கொலிசன் தமிழில் மோதல் எனக் கூறலாம்.

இப்படி மோதல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல்வேறு யுத்திகள் கையாளப் பட்டது, அதனை மோதலை நிராகரித்தல் (கொலிசன் ஆவாய்ட்னஸ் collison avoidance) மற்றும் மோதலை வருமுன் கண்டறிதல் (கொலிசன் டீடெக்ட்சன் collison detection ) என்னும் வழிமுறைப் படி தடுத்தனர். நீங்கள் CDMA போன் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அது இந்தத் தொழில்நுட்பம் கொண்டே செயல்படுகிறது...எளிதாகச் சொன்னால் நீங்கள் உங்கள் நண்பரின் கைப்பேசிக்குக் அழைப்பு விடுகிறீர்கள்..அப்போது அவர் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தால் உங்களால் பேச முடியாது அல்லவா...அதுவே கேரியர் சென்ஸ் மல்டிபிள் அக்சஸ் ..அதாவது தொடர்பில் யாரவது இருக்கிறார்களா எனத் தெரிந்துகொண்டு அடுத்தவர் முடிக்கும் வரை காத்திருந்து பின் பேசுவது.
ஒரு நேரத்தில் இந்தத் தொழிநுட்பமும் ஓத்துவராமல் போனது...அப்போது உருவானது தான் பாக்கெட்டேட்டா டிரான்ஸ்மிஷன்(PACKET DATA TRANSMISSION). அதைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்



 

  

No comments:

Post a Comment