Tuesday 31 July 2018

TCP and UDP Port





நீங்கள் தினமும் உபயோகிக்கும்  இணையதளத்திலிருந்து கைபேசியில் உபயோகிக்கும் ஷேர்இட் வரை இது இல்லாமல் இயங்கமுடியாது, அதுதான் சாப்ட்வேர் போர்ட் , இதை வைத்தே இணையமே இயங்குகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது

இந்த போர்ட் என்பதை எளிதில் புரிந்துகொள்ள நான் முன் சொன்ன எடுத்துக்காட்டை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், உங்கள் தபால் உங்களின் வீட்டிற்கு தபால்காரர் எடுத்து வருகிறார் ஆனால் உங்கள் வீடு அபார்ட்மெண்டில் ஒரு வீடாக இருக்கும்பொழுது உங்களுடைய வீட்டிற்கென ஒரு நம்பர் இருக்குமல்லவா அதுபோலவே உங்களுடைய ஐ.பி-க்கு ஒரு தகவல் வந்தாலும் அது எந்த போர்ட்-க்கு வருகிறதென்பதை வைத்தே அது எங்கு சேரவேண்டுமென முடிவு செய்யப்படும்


போர்ட் என்பது 16 பிட் கொண்ட  0 முதல் 65535 நம்பர்கள் கொண்டது, இதில் முன் கூறியது போல் TCP மற்றும் UDP PORT என தனித்தனியே PORT நம்பர் உள்ளது , அதாவது

0-65535(TCP)
0-65535(UDP)

இதில் நாம் எப்போதும் பயன்படுத்தும் இணையதள வலைத்தளங்கள் TCP PORT 80-யில் வேலை செய்யும் அல்லது  TCP PORT 443 யில் வேலை செய்யும்

இப்போது சிறிய செயல்பாட்டின்மூலம் நம்முடைய கணினியில் என்னென்ன போர்ட் உள்ளது, எது எந்த நிலையில் உள்ளதெனப் பார்க்க சிறிய செயல் உங்களுடைய கணினியில் கமாண்ட் ப்ராம்ப்ட் ஓபன் செய்துகொண்டு netstat -an என டைப் செய்யுங்கள்

இப்போது உங்கள் கணினியில் என்னென்னெ போர்ட் ஓபன் ஆகி உள்ளது எனத் தெளிவாகத் தெரியும்

*முதல் வரிசையில் உள்ளது tcp அல்லது udp என்பதை குறிப்பது


*இரண்டாவது லோக்கல்  அட்ரஸ் (Local address)- இது நம் கணினி மற்ற கணினிகளுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஐ.பி அட்ரஸ்,


*மூன்றாவது பாரின் அட்ரஸ் (Foreign Address)- இது நம் கணினிஎந்தக் கணினியை தொடர்புகொள்கிறதோ அதனின் ஐ.பி அட்ரஸ்


*நான்காவது ஸ்டேட் (State)-இது அந்த தொடர்பின் நிலையை குறிக்கும்

இதில் அந்தப் படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இடத்தை பாருங்கள், அதுதான் போர்ட்(Port)

முதல் வரி 0.0.0.0 என்னும் ஐ.பி அட்ரஸில் tcp port 80-இல் யார் வேண்டுமானாலும் தன்னுடன் கனக்ட் செய்துகொள்ளலாம் எனக் குறிக்கிறது


இந்தப் படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை பாருங்கள், இங்கு 192.168.0.109 என்னும் ஐ.பி தன்னுடைய 42344 என்னும்  tcp port மூலம் 52.230.80.159 என்னும் ஐ.பி-யுடன் 443 என்னும் tcp port-இல் இணைந்துள்ளது

YOUTUBE  எனப்படும் வீடியோ ஷாரிங் இணையத்தளம் லைவ் ஸ்ட்ரீமிங்கை UDP COMMUNICATION-ஐ உபயோகித்து எப்படி  செய்கிறதென்பதை  பற்றி அடுத்த பதிவில் காண்போம்





No comments:

Post a Comment