Sunday, 29 July 2018

பிரைவேட் ஐ,பி அட்ரஸ் (Private network IP ADDRESS )


பொதுவாக  எந்த நிறுவனத்திற்கு  இணைய சேவை வேண்டுமோ அவர்கள் ஒரு ஐ.பி அட்ரஸ் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வர், இப்படி ஒவ்வொரு அட்ட்ரஸும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு கீழ் பதிந்திருக்கும், ஆனால் எந்த நிறுவனமும் சாராமல் பொதுவான அனைவரும் உபயோகிக்கும் வகையில் சில அட்ரெஸ்ஸை ஒதுக்கியுள்ளனர், அவையே பிரைவேட் ஐ.பி அட்ரஸ்


--192.168.0.0 - 192.168.255.255 (65,536 IP addresses)
--172.16.0.0 - 172.31.255.255 (1,048,576 IP addresses)
--10.0.0.0 - 10.255.255.255 (16,777,216 IP addresses)

ஒரு நெட்ஒர்க் என்பது ஐ.பி அட்ரஸ் படி பிரிக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு நெட்ஒர்க்கில் 255 ஆக பிரிக்கலாம் உதாரணத்திற்கு 192.168.1.0-192.168.1.255 இதில்

192.168.1.0 என்பது அந்த நெட்ஒர்க்கின் பெயர்..இதனை எந்த கருவிக்கும் பொருத்த முடியாது, அதுபோல 192.168.1.255 என்பது சில செய்திகளை எல்லா கணினிகளுக்கும் தகவல் பரப்ப பயன்படுத்தப்படும், அதனால் அந்த ஐ.பி அட்ரெஸையும் உபயோகிக்க முடியாது..அதனால் 192.168.1.1 முதல் 192.168.1.254 வரை மட்டுமே பயன்படுத்த தகுதி உடையது.

ஒரு நெட்ஒர்க் என்பதை குறிக்க அது எங்கு தொடங்கி எங்கு முடியும் என்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டும் ..அதனை குறிக்க பயன்படுத்தும் சொற்றாடல் சப்நெட் மாஸ்க் (subnet mask). இப்போது ஒரு  நெட்ஒர்க்கில் 254 கருவிகள் இணைக்க வேண்டுமென்றால் 255.255.255.0 என்பது அதன் சப்நெட் மாஸ்க்-காக இருக்கவேண்டும், அதுபோல ஐபி அட்ரஸின் 4 அக்டேட்-களில் சிலது மாறும் சிலது மாறாது

மாறுவது -  ஹோஸ்ட் பிட்
மாறாதது  - நெட்ஒர்க் பிட்

இப்போது 192.168.1.0-வில்

இதில் 192.168.1(நெட்ஒர்க் பிட்(network bit))
.0(ஹோஸ்ட் பிட்(host bit)

192.168.1.0-192.168.1.255

இதன் சப்நெட் மாஸ்க் 255.255.255.0 ( இதுவே முதல் மூன்று அக்டேட் மாறாமல் இருப்பதை குறிக்கிறது )

இங்கு பார்த்தால் ஹோஸ்ட் பிட் ஒன்று முதல் 255 வரை மாறும்.

ஸ்விட்சில் மேக் அட்ரஸ் வைத்து பிரேம் உருவாக்குவது போல், இந்த ஐ.பி அடிரெஸ்ஸை வைத்து ஐ.பி பாக்கெட் (IP PACKET) உருவாக்கப்படும்.



ஒரு நெட்ஒர்க் சுவிட்ச் ஒரே நெட்ஒர்க்-குக்கு கீழ் உள்ள கணினிகளை ஒன்றிணைக்கும்.  ஒரு ரௌட்டர் இரு நெட்ஒர்க்-குகளை இணைக்கும் பாலமாக செயல்படும்
இவைகளை வைத்தே இணையம் அல்லாத தனியான ஒரு நெட்ஒர்க் வேலை செய்கிறது, இதுவரை ஒரு ரௌட்டர் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளத் தேவையான அணைத்து சித்தாத்தங்களையும் புரிந்துகொண்டோம், இப்போது ரௌட்டர் பற்றி ...


இங்கே படத்தில் கொடுக்கப் பட்டுள்ளது போல  192.168.1.0 என்பது ஒரு நெட்ஒர்க் 192.168.2.0 என்பது வேறு, இந்த இரண்டையும் இணைக்கும் கருவிதான் ரௌட்டர்..ரௌட்டர் எப்படி இந்த இணைப்பை சாத்தியப்படுகிறது என்பதை அடுத்தப் பதிவில் காண்போம்  

No comments:

Post a Comment