இணையம் என்று சொல்லும்போது உலகமே இணையக் காரணமே இந்தக் கருவி தான். ஆம் உலகத்தில் பல்வேறு வகையான நெட்ஒர்க் இருக்கும் உதாரணத்திற்கு வீட்டிற்குள் வயர்லெஸ் அல்லது லோக்கல் ஏரியா நெட்ஒர்க் , இரு நகரங்களை இணைக்கும் மெட்ரோ பாலிடன் நெட்ஒர்க், உலகத்தை இணைக்கும் கடலுக்கடியில் செல்லக்கூடிய சப்மரைன் நெட்ஒர்க், வான் வழியாக உலகத்தை இணைக்கும் சாட்டிலைட் நெட்ஒர்க் என பல்வேறு நெட்ஒர்க்-குகளை ஒன்றாக இணைக்கும் ஒரே கருவி தான் இந்த நெட்ஒர்க் ரௌட்டர்
சுவிட்ச்களில் எப்படி ஒரு கணினியை அடையாளம் காண மேக் அட்ரஸ் உதவியதோ அதே போல இந்த ரௌட்டர் கருவிகளுக்குள் அடையாளம் காண அதெற்கென ஒரு தனி பெயரை உருவாக்கினார்கள் அதுவே ஐ.பி அட்ரஸ் (IP ADDRESS). ரௌட்டர் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்பதற்கு முன் இந்த ஐ.பி அட்ரஸ் பற்றி பார்த்து விடுவோம்
* இது 32 பிட் அளவு கொண்டது, 8 ஆக்டெட்டாக பிரித்தால் 4 ஆக்டேட்
* இது இரண்டு வகைப்படும் பப்ளிக் அட்ரஸ்(PUBLIC IP ADDRESS), பிரைவேட் அட்ரஸ்(PRIVATE IP ADDRESS)
* உலகத்தில் உள்ள அனைத்து கருவிகளுக்கும் இணையத்துடன் இணைய பப்ளிக் அட்ரஸ் தேவை
* இதை மூன்று புள்ளிகள் கொன்று பிரிப்பார்கள், அதாவது (xxx.xxx.xxx.xxx)
* இது 0.0.0.0 வில் ஆரம்பித்து 255.255.255.255 என்பதுடன் முடிவடைகிறது
* அதாவது
0.0.0.0
0.0.0.1
0.0.0.2
......
.
.
.
0.0.0.255
0.0.1.0
0.0.1.1
.....
.
.
.
0.0.1.255
.....
.
.
.
255.255.255.255
இந்த வாக்கில் மொத்தம் 4294967296 (2பவர்32) ஐ.பி அட்ரஸ் உள்ளது
இந்த ஐ.பி அட்ரஸ் அனைத்தையும் நாம் உபயோகிக்க முடியாது, இதில் எதை நாம் உபயோகப் படுத்தலாம் என IANA என்னும் அமைப்பு முடிவு செய்து இந்த ஐ.பி அட்ரஸ்-களை 5 வகுப்புகளாக பிரித்தனர்
CLASS A
CLASS B
CLASS C
CLASS D
CLASS E
இதில் கிளாஸ் டி மற்றும் ஈ நம்முடைய பயன்பாட்டிற்கு அனுமதியில்லை
இந்த ஐ.பி கொன்று ரௌட்டர் எப்படி வேலை செய்கிறதென்பதை அடுத்த பதிவில் காண்போம்
No comments:
Post a Comment