இதுவரை கருவிகளுக்குள் எப்படி ஒரு தகவல் பரிமாறப்படுகிறதென பார்த்தோம், இப்போது கருவிகளையும் தாண்டி இரு கணினிகள் எப்படிப் பேசிக்கொள்கின்றன என்பது பற்றி தெளிவாக பாப்போம், இரு கணினிகள் பல்வேறு முறையில் பேசிக்கொள்ளும், அதற்கு பேசுவதற்கான தேவை நிறைய இருக்கும்
* ஏதோ ஒரு டாகுமெண்ட் வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு அனுமதி வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு சேவை வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு சேவையை அளிக்கத் தொடர்பு கொள்ளலாம்
இப்படி பல்வேறு விதமான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தொடர்புகொள்ள இரண்டே இரண்டு வழியைத்தான் பயன்படுத்துகிறது , அஃது டீ.சி.பி (TCP) ,மற்றும் யு.டி.பி(UDP)
இந்த இரண்டும் எப்படி இரு கணினிகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறதென்பதை புரிந்துகொள்ள இந்த தொழில்நுட்பம் எப்படி இவைகளை சாத்தியப்படுத்துகிறதென்பதை பாப்போம்
Transmission control protocol (TCP)
இது ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு தகவல் எங்கும் தவறவிடாமல் பரிமாற இந்த ஒரு தொழிநுட்பமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது
ப்ரோடோகால் என்பது ...ஒரு தகவல் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும்...அப்படி உருவாக்கப்பட்ட விதிகளையே ப்ரோடோகால் என்பர்
சாலையில் நாம் செல்ல எப்படி சாலை விதிகள் உள்ளதோ அதே போல ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினி செல்லவும் சில விதிமுறைகள் உள்ளன ..அதுவே ப்ரோடோகால் எனப்படும்
TCP-யின் விதிமுறைகள்:
*இங்கு சர்வர் (அளிப்பவர்/அனுப்புனர்)-கிளைன்ட்(பெறுபவர்) என இரு பகுதி இருக்க வேண்டும்
*யார் யாரிடம் தகவல் அனுப்ப விரும்பினாலும் முதலில் பெறுநர் தான் அனுப்பும் தகவலை வாங்க தயாராக உள்ளாரா என முன்னரே உறுதிப்படுத்திகொண்டு தகவலை அனுப்ப வேண்டும், அப்படி உறுதிப் படுத்த முதலில் SYN எனப்படும் பாக்கெட்டை அனுப்ப வேண்டும்
*பெறுநர் தகவல் பெற தயாராக இருந்தால் உடனே அனுப்புனரிடம் syn-ack எனப்படும் பாக்கெட்டை அனுப்பி கூற வேண்டும்
*அதன் பின்பே தகவல் பரிமாற்றம் ஆரம்பமாகும்
இதன் பெயரே 3-வே ஹேண்ட்ஷேக் என்பர் (3-WAY HANDSHAKE)
No comments:
Post a Comment