Saturday 18 August 2018

Internals of tamilrockers-an analysis

தமிழ் ராக்கர்ஸ்-இணைய உலகத்தின் வீரப்பன்

முதலில் ஒன்றைக் கூற கடமைப் பட்டுள்ளேன், தமிழ் ராக்கர்ஸ்சை புகழ்ந்தோ, இகழ்ந்தோ அவர்கள் செய்வது சரிஎன்றோ தவறென்றோ கூற இப்பதிவை எழுதவில்லை, அவர்கள் எப்படி அதனை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை விவரிக்கும் பதிவாகவே இதனை இங்கே பார்க்கப்படவேண்டுமென விரும்புகிறேன்  இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்  ஏதோ ஒன்றை தரவிறக்கம்(டௌன்லோட்) செய்யாமல் இருப்பதில்லை. அப்படி தரவிரக்குவதில் தமிழ்நாட்டில் முதலில் இருக்கும் இணையதளம் என்னவென கேட்டால் யார்வேண்டுமானாலும் யூகித்துவிடலாம் அது தமிழ் ராக்கர்ஸ். பொதுவாக ஒரு இணையதளம் இயங்க தேவையானது :

1.      இணைய முகவரி
2.      சர்வர்
3.      வெப்சைட்
4.      பப்ளிக் ஐ.பி

இந்த நான்கையும் எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்

1. இணைய முகவரி (website address):

நாம் நமக்கென ஒரு இணைய சேவையை தொடங்க முதல் தேவை இணைய முகவரி, இதனை பெற டொமைன் ரெஜிஸ்ட்றார் (Domain Registrar) என்று ஒரு பொதுவான இடம் இருக்கிறது, அங்கே நமக்கு தேவையான இணைய முகவரியை பெற்றுகொள்ளலாம் ...உதாரணத்திற்கு நாம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் RTO ஆபிசில் பதிவு செய்து வண்டி எண் வாங்குகிறோம் அல்லவா அதுபோல், இந்த இணைய முகவரியை நாம் நேரடியாக   டொமைன் ரெஜிஸ்ட்றாரிடம் பெற வேண்டிய அவசியம் இல்லை ப்ரோக்கர்கள் போல நமக்காக இந்த வேலையே செய்து முடிக்க இணையத்தில் இதனையே செய்து முடிக்க நிறைய வெப்சைட்டுகள் உள்ளன உதாரணத்திற்கு

Godaddy.com

ஆக, அவர்களிடம் நம்முடைய பெயர், நம் நிறுவனத்தின், முகவரி மற்றும் சில தகவல்களை கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். இங்கு இருக்கும் பிரச்சனை என்னவென பார்த்தால், நாம் கொடுக்கும் தகவல்கள் சரிதானா என அவர்கள் சரிபார்க்க தேவை இல்லை, நாம் போலியான தகவலைக் கூட கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்

2. சர்வர்

இங்குதான் நாம் டவுன்லோட் செய்யப்படும் படங்கள், பாட்டு மற்றும் இதரவைகளும் சேமித்திருக்கும் கிடங்கு. இங்கிருந்தே நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்கிறோம் இது விண்டோஸ் ஓ.எஸ் அல்லது லினக்ஸ் ஆக கூட இருக்கக் கூடும் பெரும்பாலும் லினக்ஸ் பயன்படுத்தப்படும், இந்த சர்வரை பயர்வால் எனப்படும் இணைய தடுப்பு சுவர் கொண்டும் IDS/IPS எனப்பட்டும் செயற்கை அறிவாற்றல் பெற்ற சாதனங்கள் கொண்டும் பாதுகாக்கப்படுகின்றன   

3. வெப்சைட்

இதுவே நாம் இணையத்தில் கண்களால் பார்க்கும், நாம் பார்பதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர், இதன் மூலமாகவே நாம் தரவிறக்கம் செய்கிறோம், இதனை உருவாக்க கணினியில் பல மொழிகள் பயன்படுத்தப்படும் உதாரணத்திற்கு PHP, ASP.NET

5.      பப்ளிக் ஐ.பி (Public IP)

நாம் இணையத்தில் தொடர்புகொள்ள வேண்டுமென்றால் இந்த ஐ.பி இல்லாமல் நம்மால் இயங்க முடியாது, இணைய முகவரி போல் இதனையும் ப்ரோகர்களிடமே நாம் பெற்றுக்கொள்ளலாம்

ஆக இவை அனைத்தும் பெற்றுவிட்டால் நம்மால் எளிதாக ஒரு இணைய தளத்தை நடத்த முடியும்

தமிழ் ராக்கர்ஸ் எப்படி இயங்குகிறது ?

நம்முடைய அரசு இந்த இணைய சேவையை நிறுத்த எடுக்கும் முயற்சி :
1.      இணைய முகவரியை பிளாக் செய்வது
2.      அவர்களின் twitter, Facebook ஐ.டி-களை பிளாக் செய்வது

இதனை  தமிழ் ராக்கர்ஸ் எப்படி எதிர்கொள்கிறது ?

1.      ஒரு முகவரியை நிறுத்தினால் இன்னொரு முகவரியை வாங்கி அதில் சேவையை தொடர்வது (உதாரணத்திற்கு tamilrockers.ru பிளாக் செய்தால் tamilrockers.cl)

2.      ட்விட்டர் மற்றும் facebook ஐ.டி-யை பிளாக் செய்தால் புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்வது

தமிழ் ராக்கர்ஸ் எப்படி தன்னுடைய இணையதளத்தை காக்கின்றனர் ?
*பயர் வால்

*IPS

*தன்னுடைய சர்வரை DOS அட்டாக்கில் இருந்து காப்பது

*போலியான தகவல்களை கொண்டு இணைய முகவரி வாங்குவது

*எங்கும் தன்னை பற்றிய தகவலை பதிவிடாமல் இருப்பது

*தனக்கு படங்கள் அளிக்கும் SOURCE தெரியாமல் பார்த்துக்கொள்வது

* இந்தியாவிற்கு வெளியில் இயங்குவது

தொடரும் ....    

இதை இவர்கள் செய்ய வேண்டுமென்பதில்லை ஆனால் செய்கிறார்கள் 

Internals of tamilrockers-an analysis

தமிழ் ராக்கர்ஸ்-இணைய உலகத்தின் வீரப்பன்

முதலில் ஒன்றைக் கூற கடமைப் பட்டுள்ளேன், தமிழ் ராக்கர்ஸ்சை புகழ்ந்தோ, இகழ்ந்தோ அவர்கள் செய்வது சரிஎன்றோ தவறென்றோ கூற இப்பதிவை எழுதவில்லை, அவர்கள் எப்படி அதனை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை விவரிக்கும் பதிவாகவே இதனை இங்கே பார்க்கப்படவேண்டுமென விரும்புகிறேன்  
இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்  ஏதோ ஒன்றை தரவிறக்கம்(டௌன்லோட்) செய்யாமல் இருப்பதில்லை. அப்படி தரவிரக்குவதில் தமிழ்நாட்டில் முதலில் இருக்கும் இணையதளம் என்னவென கேட்டால் யார்வேண்டுமானாலும் யூகித்துவிடலாம் அது தமிழ் ராக்கர்ஸ். பொதுவாக ஒரு இணையதளம் இயங்க தேவையானது :

1.      இணைய முகவரி
2.      சர்வர்
3.      வெப்சைட்
4.      பப்ளிக் ஐ.பி
இந்த நான்கையும் எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்
இணைய முகவரி (website address):

நாம் நமக்கென ஒரு இணைய சேவையை தொடங்க முதல் தேவை இணைய முகவரி, இதனை பெற டொமைன் ரெஜிஸ்ட்றார் (Domain Registrar) என்று ஒரு பொதுவான இடம் இருக்கிறது, அங்கே நமக்கு தேவையான இணைய முகவரியை பெற்றுகொள்ளலாம் ...உதாரணத்திற்கு நாம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் RTO ஆபிசில் பதிவு செய்து வண்டி எண் வாங்குகிறோம் அல்லவா அதுபோல், இந்த இணைய முகவரியை நாம் நேரடியாக   டொமைன் ரெஜிஸ்ட்றாரிடம் பெற வேண்டிய அவசியம் இல்லை ப்ரோக்கர்கள் போல நமக்காக இந்த வேலையே செய்து முடிக்க இணையத்தில் இதனையே செய்து முடிக்க நிறைய வெப்சைட்டுகள் உள்ளன உதாரணத்திற்கு
Godaddy.com
ஆக, அவர்களிடம் நம்முடைய பெயர், நம் நிறுவனத்தின், முகவரி மற்றும் சில தகவல்களை கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். இங்கு இருக்கும் பிரச்சனை என்னவென பார்த்தால், நாம் கொடுக்கும் தகவல்கள் சரிதானா என அவர்கள் சரிபார்க்க தேவை இல்லை, நாம் போலியான தகவலைக் கூட கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்

2. சர்வர்

இங்குதான் நாம் டவுன்லோட் செய்யப்படும் படங்கள், பாட்டு மற்றும் இதரவைகளும் சேமித்திருக்கும் கிடங்கு. இங்கிருந்தே நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்கிறோம் இது விண்டோஸ் ஓ.எஸ் அல்லது லினக்ஸ் ஆக கூட இருக்கக் கூடும் பெரும்பாலும் லினக்ஸ் பயன்படுத்தப்படும், இந்த சர்வரை பயர்வால் எனப்படும் இணைய தடுப்பு சுவர் கொண்டும் IDS/IPS எனப்பட்டும் செயற்கை அறிவாற்றல் பெற்ற சாதனங்கள் கொண்டும் பாதுகாக்கப்படுகின்றன   

3. வெப்சைட்

இதுவே நாம் இணையத்தில் கண்களால் பார்க்கும், நாம் பார்பதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர், இதன் மூலமாகவே நாம் தரவிறக்கம் செய்கிறோம், இதனை உருவாக்க கணினியில் பல மொழிகள் பயன்படுத்தப்படும் உதாரணத்திற்கு PHP, ASP.NET

5.      பப்ளிக் ஐ.பி (Public IP)

நாம் இணையத்தில் தொடர்புகொள்ள வேண்டுமென்றால் இந்த ஐ.பி இல்லாமல் நம்மால் இயங்க முடியாது, இணைய முகவரி போல் இதனையும் ப்ரோகர்களிடமே நாம் பெற்றுக்கொள்ளலாம்

ஆக இவை அனைத்தும் பெற்றுவிட்டால் நம்மால் எளிதாக ஒரு இணைய தளத்தை நடத்த முடியும்

தமிழ் ராக்கர்ஸ் எப்படி இயங்குகிறது ?

நாம்முடைய அரசு இந்த இணைய சேவையை நிறுத்த எடுக்கும் முயற்சி :
1.      இணைய முகவரியை பிளாக் செய்வது
2.      அவர்களின் twitter, Facebook ஐ.டி-களை பிளாக் செய்வது

இதனை  தமிழ் ராக்கர்ஸ் எப்படி எதிர்கொள்கிறது ?

1.      ஒரு முகவரியை நிறுத்தினால் இன்னொரு முகவரியை வாங்கி அதில் சேவையை தொடர்வது (உதாரணத்திற்கு tamilrockers.ru பிளாக் செய்தால் tamilrockers.cl)

2.      ட்விட்டர் மற்றும் facebook ஐ.டி-யை பிளாக் செய்தால் புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்வது

தமிழ் ராக்கர்ஸ் எப்படி தன்னுடைய இணையதளத்தை காக்கின்றனர் ?
*பயர் வால்

*IPS

*தன்னுடைய சர்வரை DOS அட்டாக்கில் இருந்து காப்பது

*போலியான தகவல்களை கொண்டு இணைய முகவரி வாங்குவது

*எங்கும் தன்னை பற்றிய தகவலை பதிவிடாமல் இருப்பது

*தனக்கு படங்கள் அளிக்கும் SOURCE தெரியாமல் பார்த்துக்கொள்வது

* இந்தியாவிற்கு வெளியில் இயங்குவது

தொடரும் ....    

Friday 17 August 2018

Does Anti-virus kills all the virus?

உங்களுடைய ஆன்டி வைரஸ் உங்களின் கணினியை பத்திரமாக பாதுகாக்கிறதென நம்புகிறீர்களா, அதனை பொய்யாக்கவே இப்பதிவு.

டிவி விளம்பரங்களில் சில சுத்தம் செய்யும் டிஸ்-இன்பெக்டன்ட்  விளம்பரம் பார்த்திருந்தால் அதில்  சொல்லுவார்கள் 99.99% கிருமிகளை கொல்லும் என, அது ஏன் அந்த 0.01% கிருமிகளை அவர்களால் அழிக்க முடியவில்லை என உங்கள்குக்கு தோன்றியதுண்டா, அப்படி தோன்றினால் அந்தக் கேள்விக்கும் இப்பதிவில் உங்களுக்கு பதில் கிடைக்கும்

மிமிகாட்ஸ் (Mimikatz) என்பது ஒரு வகையான கம்ப்யூட்டர் வைரஸ் என்று வைத்துக்கொள்ளுங்கள் ( கம்ப்யூட்டர் வைரஸ் என்றால் ...கம்ப்யூட்டரை செயலிழக்கவோ அல்லது தவறான செயலை செய்ய பயன்படுத்தவோ அதனின் செயல்பாட்டை மாற்றி அமைக்கும் சாப்ட்வேர் வைரஸ் எனக் கூறலாம் ...உதாரணத்திற்கு ..நமக்கு ஜுரம் வர ஒரு வைரஸ் காரணமாய் இருக்கிறதல்லவா அதுபோல ...கம்ப்யூட்டர் வைரஸ் கணினியை தாக்கினால் கணினியால் முன்புபோல் செயலாற்ற முடியாது )..அந்த வைரஸ் நம் கணினியை தாக்காமல் இருக்க நாம் ஆன்டி வைரஸ் போடுகிறோம் ...இப்போது அந்த ஆன்டி வைரஸ் போட்டுள்ள உங்கள் கணினியில் என்னுடைய மிமிகாட்ஸ் எனப்படும் வைரஸை எப்படி ஏற்றுகிறேன் என்று பாருங்கள்

முதலில் எனது மிமிகாட்ஸ் ஸ்க்ரிப்டை ரன் செய்து பார்க்கிறேன்

எனது கணினியில் உள்ள ஆன்டி-வைரஸ் அதனை செய்ய விடாமல் தடுத்துவிடுகிறது

இப்போது ஒன்றுமே இல்லை எனது சகிரிப்ட்டில் பெயர்  மாற்றுகிறேன்

Invoke-Mimikatz.ps1 --->Invoke-Mimidogz

எனது வைரஸ் ப்ரோக்ராமில் உள்ள தேவையற்ற பாகங்களை நீக்குகிறேன்

sed -i -e '/<#/,/#>/c\\' Invoke-Mimikatz.ps1

sed -i -e 's/^[[:space:]]*#.*$//g' Invoke-Mimikatz.ps1

  இந்த சிறிய   மாற்றமே   என்னை தடையை மீறி என்னுடைய வைரஸை கணினியில் செயல்பட செய்துவிட்டது

இவ்வளவு தான்நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் ஆன்டி-வைரஸின் தடுப்பு, இப்போது புரிகிறதா ஏன் டிஸ்-இன்பெக்டன்ட்  விளம்பரங்களில் 99.9% கிருமிகளை கொள்வதாய் சொல்கிறார்கள் என்று ...அவர்களால் என்றுமே அந்த 0.01% கிருமியை கொன்றுவிட முடியாது ...ஒன்றை கொன்றால் புதிதாய் ஒன்று வரும் ...அதே போல்தான் கம்ப்யூட்டர் வைரஸ் என்பதும் ..எதுவுமே 100% பாதுகாப்பை வழங்க முடியாது ,  நாம் தான் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்

Thursday 16 August 2018

Denial-of-service-attack

நீங்கள் ஒரு வெப்சைட்டோ அல்லது இன்டர்நெட்டில் ஒரு சர்வர் வைத்திருந்தாலோ இந்த வார்த்தையை கேட்காமல் இருந்திருக்க முடியாது.

ஆம், டினயல்-ஆப்-சர்வீஸ் (Denial-of-service) என்பது ஒரு கணினியோ அல்லது ஏதோ ஒரு சர்வரோ நமக்கு ஒரு சேவையை வழங்கி வந்தால்(எடுத்துக்காட்டு :ஒரு வெப்சைட் அல்லது ஏதோ ஒரு DNS சேவை வழங்கிவருதல்)...அந்த சேவையை தொடர்ந்து தொடர்புகொண்டு...அந்த சர்வருடைய அணைத்து சக்தியையும் உறிஞ்சி அதனை செயலிழக்க செய்வது.இது எப்படி சாத்தியப்படுகிறது என்பதையும், இதனில் எத்தனை வகை உள்ளதென்பதையும் இப்பதிவில் காண்போம்

இப்பதிவில் வரும் அனைத்தும் தவறான நோக்கத்துடன் பயன்படுத்தப்பட்டால் தக்க தண்டனைக்கு உள்ளாவீர்கள், அதற்கு நான் பொறுப்பாக முடியாது !!!

இப்போது உதாரணத்திற்கு அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவு வரும் இணையதளத்தை எடுத்துக்கொள்வோம், நாளை அந்த இணைய தளத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என அறிவித்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம்

இப்போது இந்த ரிசல்ட் வரவேண்டாம் என நினைக்கும் சில மாணவர்கள் மேல் கூறிய அட்டாக்கை பயன்படுத்தி ரிசல்ட் வெளியிடப்படும் சர்வரை செயலிழக்க செய்யலாம்

வெப்-சர்வர் TCP போர்ட் 80-ல் ஓடிக்கொண்டிருக்கும் அதற்கு தொடர்ந்து TCP SYN பாக்கெட் அனுப்பிக்கொண்டே இருந்தால், எல்லா பாக்கெட்டிற்க்கும் அது பதில்  SYN-ACK அனுப்பிக்கொண்டே இருக்கும் , இதனால் சர்வர் ஸ்லோ ஆகி தனது சேவையை செய்ய முடியாமல் போகும், இதன் பெயர் TCP SYN-FLOOD எனக் கூறுவர்.

                      TCP SYN-FLOOD-ஆல் தாக்கப்பட்ட பிபிசி இணையதளம்

Wednesday 15 August 2018

Why we need to enable two-factor authentication?

நம்முடைய ஈ-மெயில் அக்கௌன்ட்டுக்கோ, பேங்க் அகௌண்ட்டுக்கோ Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷன் (அதாவது இரு பூட்டு திறக்க வேண்டிய நிலை) செயல்படுத்தி வைத்துக்கொள்வது எதற்கு, அதனால் என்னெனவற்றை நம்மால் தடுத்து நிறுத்தமுடியும் என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்

ஒரு பேச்சிற்கு உங்களுடைய ஜி-மெயில் அக்கௌன்ட் பாஸ்வோர்டை யாரோ ஹேக் செய்து கண்டுபிடித்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம், அப்படி செய்தால் ..அந்த தருணத்திலும் உங்களுடைய அக்கௌன்ட்டை காக்க முடியும், ஆம் அதற்கு தான் இந்த  Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷன்

இது நீங்கள் இயக்கிவிட்டால் நீங்கள் உங்கள் கணினியிலோ மொபைலிலோ உங்களுடைய  வங்கி கணக்கினுள் உங்களுடைய கடவுச்சொல் கொண்டு உள்-நுழையும் பொழுது அடுத்த கட்டமாக உங்களுடைய கைபேசிக்கு SMS மூலமாக ஒரு OTP(One Time Password) வரும், அந்த என்னை சரியாக டைப் செய்தால் உங்களை உள்நுழைய அனுமதிக்கும்  

மேல் கூறிய எடுத்துக்காட்டு படி பார்த்தால் என்னதான் ஹேக்கர் உங்களுடைய கடவுச்சொல்லை தெரிந்து வைத்திருந்தாலும், உங்களுடைய கைபேசிக்கு வரும் OTP-யை தெரிந்துகொள்ள முடியாதல்லவா, அதனால் உங்களின் கடவுச்சொல் தெரிந்தாலும் அது வீணாகிவிடும், இதனால் உங்களின் ஆன்லைன் வங்கி கணக்கு மற்றும் மெயில் அக்கௌன்ட்களில் Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷனை இயக்கி வைத்துக்கொள்வது நல்லது

Tuesday 14 August 2018

crypto-mining using browser

படம், பாட்டு டவுன்லோட் செய்யும் வெப்சைட்டுகள் முன்னாளில் அதில் போடும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதித்து வந்தன, இப்போது அவர்களுக்கு புதிதாக ஒரு வழி கிடைத்துள்ளது..அதுவே கிரிப்டோ மைனிங்

கிரிப்டோ மைனிங் என்றால்..நீங்கள் ஒரு வலைத்தளத்தை ஓபன் செய்யும் பொழுது அந்த வலைத்தளத்தில் உள்ள ஒரு கோடிங் உங்கள் கணினியை ஆன்லைன் காயின் (அதாவது டிஜிட்டல் பணத்தை ) உருவாக்க உபயோகித்துக்கொள்ளும், இவை அனைத்தும் உங்களுக்கு தெரியாமலே நடக்கும்

இதுபோல உள்ள இணைய தளங்களை நீங்கள் பார்க்கும்பொழுது உங்களின் கணினி சூடாகும், உள்ளே உள்ள குலிங்-பேன் வேகமாக சுத்தும், உங்களுடைய CPU உபயோகம் 100%-ஐ தொடும், இதனால் உங்கள் கணினி சீக்கிரம் பழுதடைய வாய்ப்புள்ளது

மேலே உள்ள படத்தை பாருங்கள், நான் இந்த wotsite[.]net ஓபன் செய்தவுடன் எனது CPU யூசேஜில் முதலுக்கு வந்தது இன்டர்நெட் எஸ்ப்ளோரர் , அதாவது wotsite[.]net ஓபன் செய்தவுடன் இன்டர்நெட் எஸ்ப்ளோரர் மட்டுமே எனது  CPU-வை அதிகம் உறிஞ்சுகிறது

இதனை தடுப்பதற்கு கிரோமில் ஒரு ஆட்-ஆன் உள்ளது :https://chrome.google.com/webstore/detail/no-coin-block-miners-on-t/gojamcfopckidlocpkbelmpjcgmbgjcl?hl=en

Monday 13 August 2018

how to idenify virus/malware in your mobile

உங்கள் மொபைல் வைரஸ் தாக்கப்பட்டால் அல்லது ஏதாவது மால்வேர் இருந்தால் அதனை எப்படி சில அறிகுறிகளை வைத்து கண்டுபிடிப்பது என இப்பதிவில் காண்போம்

1. பேட்டரி சீக்கிரம் குறையும்

2. திடீரென விளம்பரங்கள் ஓபன் ஆகும்

3. மொபைல் மிக ஸ்லோவாக வேலை செய்யும்

4.உங்களை அறியாமல் உங்களின் மொபைல் டாட்டா தீர்ந்துபோகும் 

5. ஆப்-கள் அடிக்கடி வேலை செய்யாமல் அப்படியே நின்றுவிடும் அல்லது கிராஷ் ஆகும் 

இப்படி ஏதாவது அறிகுறி உங்களுக்கு தெரிந்தால், உடனடியாக மொபைலை பேக்கப் எடுத்துவிட்டு ரீ-செட் செய்வது சிறந்தது