இணையம் வேலைசெய்வதே ஐ.பி அட்ரஸ் வைத்து எனவைத்துக்கொள்வோம், இப்போது நாம் கூகிள் இணைய தளம் செல்ல வேண்டுமென்றால் 172.217.163.110 என்ற ஐ.பி டிரெஸ்ஸை தொடரபுகொள்ள வேண்டும் ,அதே போல facebook இணைய தளத்தை தொடர்புகொள்ள வேண்டுமென்றால் 157.240.13.35 இந்த அட்ரெஸ்ஸை தொடர்புகொள்ள வேண்டும், இப்படி எல்லா அட்ரெஸ்ஸையும் நம்மால் நியாபகம் வைத்துக்கொள்வது கடினமல்லவா, அதனை எளிதாகவே DNS, ஒரு நிமிடம் இந்த DNS வேலை செய்யாமல் நின்றுவிட்டால் இணையமே நின்றுவிடும், அப்படிப்பட்ட DNS பற்றி இப்பதிவில் காண்போம்
இந்த DNS நாம் எளிதில் நியாபகம் வைத்துக்கொள்ளும்படியாக ஐ.பி அட்ரெஸ்ஸுகளுடன் பெயர்களை இணைத்து சேமித்துவைத்துக்கொள்ளும், இப்போது நாம் கூகிள் எனதானே டைப் செய்கிறோம் உள்ளுக்குள் இருக்கும் DNS அதனை ஐ.பி அடிரஸ்ஸாக மாற்றி நம் கணினியிடம் கொடுக்கும், நம் கணினி அதை வைத்து தொடர்புகொள்ள ஆரம்பித்து விடும்
இப்போது டொமைன்(Domain) பற்றி :
டொமைன் என்பது நாம் ஒரு வெப்சைட் இணையத்தில் நடத்த வேண்டுமென்றால் அதற்கு அத்தியாவசியமாக ஒரு பெயர் தேவை, அந்த பெயர் ஒரு இடத்தில் பதிவு செய்யப்படவேண்டும், எப்படி நாம் பிறந்தவுடன் நம் பெயரை பதிவுசெய்கிறோமோ அதே போல்
இந்த டொமைன் நாம் உருவாக்கும் வெப்சைட்டின் நோக்கம் கொண்டு பல முறையாக பிரித்துள்ளனர்
.COM என்றால் கமர்சியல் (அதாவது வணிகம் அல்லது தொழில் சம்மந்தப்பட்டது )
.ORG (ORGANISATION ) அதாவது பணம், வியாபாரம் சம்மந்தமில்லாத ஒன்று..உதாரணத்திற்கு தன்னார்வலர்கள்தொண்டு நிறுவனம்
.GOV (GOVERNMENT) அரசு சம்மந்தமான இணையதளம்
.IN (இந்தியா) இந்தியாவிற்கு உரிய வெப்சைட்
இப்படி ஒரு இணையதளத்தின் நோக்கம் கொண்டு அதனை பிரித்து கொடுத்துள்ளனர்
No comments:
Post a Comment