நம்முடைய ஈ-மெயில் அக்கௌன்ட்டுக்கோ, பேங்க் அகௌண்ட்டுக்கோ Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷன் (அதாவது இரு பூட்டு திறக்க வேண்டிய நிலை) செயல்படுத்தி வைத்துக்கொள்வது எதற்கு, அதனால் என்னெனவற்றை நம்மால் தடுத்து நிறுத்தமுடியும் என்பதை பற்றி இப்பதிவில் காண்போம்
ஒரு பேச்சிற்கு உங்களுடைய ஜி-மெயில் அக்கௌன்ட் பாஸ்வோர்டை யாரோ ஹேக் செய்து கண்டுபிடித்துவிட்டார்கள் என வைத்துக்கொள்வோம், அப்படி செய்தால் ..அந்த தருணத்திலும் உங்களுடைய அக்கௌன்ட்டை காக்க முடியும், ஆம் அதற்கு தான் இந்த Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷன்
இது நீங்கள் இயக்கிவிட்டால் நீங்கள் உங்கள் கணினியிலோ மொபைலிலோ உங்களுடைய வங்கி கணக்கினுள் உங்களுடைய கடவுச்சொல் கொண்டு உள்-நுழையும் பொழுது அடுத்த கட்டமாக உங்களுடைய கைபேசிக்கு SMS மூலமாக ஒரு OTP(One Time Password) வரும், அந்த என்னை சரியாக டைப் செய்தால் உங்களை உள்நுழைய அனுமதிக்கும்
மேல் கூறிய எடுத்துக்காட்டு படி பார்த்தால் என்னதான் ஹேக்கர் உங்களுடைய கடவுச்சொல்லை தெரிந்து வைத்திருந்தாலும், உங்களுடைய கைபேசிக்கு வரும் OTP-யை தெரிந்துகொள்ள முடியாதல்லவா, அதனால் உங்களின் கடவுச்சொல் தெரிந்தாலும் அது வீணாகிவிடும், இதனால் உங்களின் ஆன்லைன் வங்கி கணக்கு மற்றும் மெயில் அக்கௌன்ட்களில் Two-factor Authentication டூ-பாக்டர் ஆதென்டிகேஷனை இயக்கி வைத்துக்கொள்வது நல்லது
No comments:
Post a Comment