மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளத்தை பார்த்தால் உங்களுக்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்து விடும்
OSI மாடலின் கீழிருந்து முதலாக வந்தால் நாம் முன்பு பார்த்தது போல் கருவிகளையும் இணைப்பையும் முக்கியமாக ஈதர்நெட் கொண்டு அமைக்கப் படுவதே பிஸிக்கல் லேயர்
சுவிட்ச் மற்றும் ஹப் கொண்டு பிரேம் மூலம் தகவலை தொடர்பு கொள்வதே இரண்டாம் லேயர் (Data-Link Layer)
ரௌட்டர் கொன்று ஒரு நெட்ஒர்க்கில் இருந்து இன்னொரு நெட்ஒர்க்கிற்கு தகவலை பாக்கெட் மூலம் கடத்துவதே மூன்றாம் லேயர் (Network Layer)
எந்த முறையில்(TCP/UDP) நம்முடைய தகவல் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினி செல்லவேண்டுமென முடிவு செய்யும் நான்காம் லேயர்(Transport Layer)
இரு அப்ளிகேஷன் இடையில் தொடர்பை இந்த லேயரில் இருந்துதான் நிறுவப்படுகிறது , செஷன் எண்ணப்படும் இரு கணினிகளுக்கு இடையே நிஜமான டாட்டா பகிர்வு இந்த லேயரில் தான் ஆரம்பமாகிறது -Session Layer
ஒரு நெட்ஒர்க்கில் அனுப்பும் விதம் இருக்கும் டேட்டாவை அப்ளிகேஷனில் காட்டும் விதமாக மாற்றும் வேலையே இந்த ப்ரெசன்ட்டேஷன் லேயர் செய்கிறது (Presentation Layer)
கடைசி லேயரான அப்ப்ளிகாடின் லேயர் மனிதர்கள் பயன்படுத்த எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் டேட்டாவை மாற்றி அமைக்கும், இந்த லேயரில் தான் நாம் பயன்படுத்தும் வலைத்தளம், மொபைல் செயலி என அனைத்துமே இயங்குகிறது ..உதாரணத்திற்கு ஒரு பஸ் ஓட்டும் ட்ரைவர் போல நாம் பேருந்தில் பயணிப்பவர் போல நினைத்துக்கொள்ளுங்கள் , பேருந்தில் பயணிக்க நமக்கு பேருந்து ஓட்ட தேவை இல்லை ...அதே போல் ஓட்டுனருக்கு அதன் என்ஜின் எப்படி வேலை செய்கிறது, பெட்ரோல் எப்படி தயாரிக்கப் படுகிறதென தெரியத் தேவை இல்லை, இதையே லேயர் ஆப் அப்ஸ்ட்ரக்ஷன் என்பர் (Layer of abstraction), இதனை அப்படியே OSI லேயருடன் ஒப்பிட்டு பாருங்கள், அவ்வளவே
No comments:
Post a Comment