Saturday 4 August 2018

Internet Infrastructure

உலகம் முழுவதும் இணையத்தில் தொடர்புகொள்ள முடிந்தாலும் சில நாடுகளே இன்னமும் இணையத்தை அதிகம் பயன்படுத்துகிறது, (மேல் கொடுக்கப்பட்டுள்ள படத்தில் வெளிச்சம் உள்ள இடங்களில் இணையத்தில் இணைக்கப்பட்ட கருவிகள் உள்ளது என்பதை குறிக்கும்), இந்த இணையம் 99% கடல் வழி அமைக்கப்பட்ட கேபிளின் வழியாகவே அமைக்கப்படுகிறது, ஆம் நாம் கூகிள்.காம் என டைப் செய்தவுடன் நம் கண்ணுக்கு தெரியும் வெப் பேஜ் ...பல மைல் கடலுக்கு அடியில் பயணித்து நம் கருவியை வந்து சில மில்லி நொடிகளில் அடைந்துள்ளது.இந்த தொடர்பு எவ்வளவு நீண்ட, மற்றும் எவ்வளவு கருவிகளை, எவ்வளவு நிறுவனங்களைக் கடந்து வருகிறதென்பதை இங்கு காண்போம்


இணையம் என்பது பல பெரிய நெட்ஒர்க்குகளின் குழுமம் , அவை அனைத்தும் ஒன்றோடொன்று தொடர்பு கொள்வதால் மட்டுமே இணையம் வேலை செய்கிறது , இப்படிப்பட்ட பெரிய நெட்ஒர்க்குகளை Network service provider என சொல்வர் UUNET, CerfNet, IBM, BBN Planet, SprintNet, PSINet என பல NSP இருக்கிறார்கள்

ஒரு NSP மூன்று  Network Access Points(NAP)-யுடன் இணைந்திருக்க வேண்டும் 

NSP -யின் அடுத்த வேலை  Metropolitan Area Exchanges (MAE) களுக்குள் தகவல் பரிமாற்ற இணைப்பை ஏற்படுத்துவது

NSP-களிடம் இருந்தே Internet Service Provider (ISP)-கள் இன்டர்நெட் பெறுகின்றனர் சென்னையில் பிரபலமானISP-கள் ஏர்டெல், BSNL, act broadband போல 

அவர்களிடம் இருந்தே நாம் இன்டர்நெட் சேவை பெறுகிறோம்  


இந்திய BSNL, மேல் கொடுக்கப்பட்டுள்ள படம் போலத்தான் OFC மூலம் இணைக்கப்பட்டிருக்கிறது , நீங்கள் ரோட்டில் செல்லும்போது ஓரங்களில் மைல் கல் போல வைக்கப்பட்டு சிவப்பு பெயிண்ட் அடிக்கப்பட்டு OFC என எழுதி இருக்கும் 



தூதுக்குகுடியையும் இலங்கையையும் இணைக்கும் கடல் வழிக் கேபிள் 



டென்மார்க்கில் கடலுக்கு அடியில் செல்லக்கூடிய கேபிள்களை பராமரிக்கும் மரைன் என்ஜினீயரின் இண்டர்வூ , பாருங்கள்  







Source:http://www.theshulers.com/whitepapers/internet_whitepaper/index.html#int_infra











No comments:

Post a Comment