Tuesday, 14 August 2018

crypto-mining using browser

படம், பாட்டு டவுன்லோட் செய்யும் வெப்சைட்டுகள் முன்னாளில் அதில் போடும் விளம்பரங்களை வைத்து பணம் சம்பாதித்து வந்தன, இப்போது அவர்களுக்கு புதிதாக ஒரு வழி கிடைத்துள்ளது..அதுவே கிரிப்டோ மைனிங்

கிரிப்டோ மைனிங் என்றால்..நீங்கள் ஒரு வலைத்தளத்தை ஓபன் செய்யும் பொழுது அந்த வலைத்தளத்தில் உள்ள ஒரு கோடிங் உங்கள் கணினியை ஆன்லைன் காயின் (அதாவது டிஜிட்டல் பணத்தை ) உருவாக்க உபயோகித்துக்கொள்ளும், இவை அனைத்தும் உங்களுக்கு தெரியாமலே நடக்கும்


இதுபோல உள்ள இணைய தளங்களை நீங்கள் பார்க்கும்பொழுது உங்களின் கணினி சூடாகும், உள்ளே உள்ள குலிங்-பேன் வேகமாக சுத்தும், உங்களுடைய CPU உபயோகம் 100%-ஐ தொடும், இதனால் உங்கள் கணினி சீக்கிரம் பழுதடைய வாய்ப்புள்ளது


மேலே உள்ள படத்தை பாருங்கள், நான் இந்த wotsite[.]net ஓபன் செய்தவுடன் எனது CPU யூசேஜில் முதலுக்கு வந்தது இன்டர்நெட் எஸ்ப்ளோரர் , அதாவது wotsite[.]net ஓபன் செய்தவுடன் இன்டர்நெட் எஸ்ப்ளோரர் மட்டுமே எனது  CPU-வை அதிகம் உறிஞ்சுகிறது


இதனை தடுப்பதற்கு கிரோமில் ஒரு ஆட்-ஆன் உள்ளது :https://chrome.google.com/webstore/detail/no-coin-block-miners-on-t/gojamcfopckidlocpkbelmpjcgmbgjcl?hl=en

No comments:

Post a Comment