Saturday 18 August 2018

Internals of tamilrockers-an analysis




தமிழ் ராக்கர்ஸ்-இணைய உலகத்தின் வீரப்பன்

முதலில் ஒன்றைக் கூற கடமைப் பட்டுள்ளேன், தமிழ் ராக்கர்ஸ்சை புகழ்ந்தோ, இகழ்ந்தோ அவர்கள் செய்வது சரிஎன்றோ தவறென்றோ கூற இப்பதிவை எழுதவில்லை, அவர்கள் எப்படி அதனை சாத்தியமாக்குகிறார்கள் என்பதை விவரிக்கும் பதிவாகவே இதனை இங்கே பார்க்கப்படவேண்டுமென விரும்புகிறேன்  
இணையம் பயன்படுத்துவோரில் பெரும்பான்மையானவர்  ஏதோ ஒன்றை தரவிறக்கம்(டௌன்லோட்) செய்யாமல் இருப்பதில்லை. அப்படி தரவிரக்குவதில் தமிழ்நாட்டில் முதலில் இருக்கும் இணையதளம் என்னவென கேட்டால் யார்வேண்டுமானாலும் யூகித்துவிடலாம் அது தமிழ் ராக்கர்ஸ். பொதுவாக ஒரு இணையதளம் இயங்க தேவையானது :

1.      இணைய முகவரி
2.      சர்வர்
3.      வெப்சைட்
4.      பப்ளிக் ஐ.பி
இந்த நான்கையும் எப்படி பெறுவது என்பதை பார்ப்போம்
இணைய முகவரி (website address):

நாம் நமக்கென ஒரு இணைய சேவையை தொடங்க முதல் தேவை இணைய முகவரி, இதனை பெற டொமைன் ரெஜிஸ்ட்றார் (Domain Registrar) என்று ஒரு பொதுவான இடம் இருக்கிறது, அங்கே நமக்கு தேவையான இணைய முகவரியை பெற்றுகொள்ளலாம் ...உதாரணத்திற்கு நாம் ஒரு இருசக்கர வாகனம் வாங்கினால் RTO ஆபிசில் பதிவு செய்து வண்டி எண் வாங்குகிறோம் அல்லவா அதுபோல், இந்த இணைய முகவரியை நாம் நேரடியாக   டொமைன் ரெஜிஸ்ட்றாரிடம் பெற வேண்டிய அவசியம் இல்லை ப்ரோக்கர்கள் போல நமக்காக இந்த வேலையே செய்து முடிக்க இணையத்தில் இதனையே செய்து முடிக்க நிறைய வெப்சைட்டுகள் உள்ளன உதாரணத்திற்கு
Godaddy.com
ஆக, அவர்களிடம் நம்முடைய பெயர், நம் நிறுவனத்தின், முகவரி மற்றும் சில தகவல்களை கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம். இங்கு இருக்கும் பிரச்சனை என்னவென பார்த்தால், நாம் கொடுக்கும் தகவல்கள் சரிதானா என அவர்கள் சரிபார்க்க தேவை இல்லை, நாம் போலியான தகவலைக் கூட கொடுத்து பதிவு செய்துகொள்ளலாம்

2. சர்வர்

இங்குதான் நாம் டவுன்லோட் செய்யப்படும் படங்கள், பாட்டு மற்றும் இதரவைகளும் சேமித்திருக்கும் கிடங்கு. இங்கிருந்தே நம்முடைய கணினிக்கு தரவிறக்கம் செய்கிறோம் இது விண்டோஸ் ஓ.எஸ் அல்லது லினக்ஸ் ஆக கூட இருக்கக் கூடும் பெரும்பாலும் லினக்ஸ் பயன்படுத்தப்படும், இந்த சர்வரை பயர்வால் எனப்படும் இணைய தடுப்பு சுவர் கொண்டும் IDS/IPS எனப்பட்டும் செயற்கை அறிவாற்றல் பெற்ற சாதனங்கள் கொண்டும் பாதுகாக்கப்படுகின்றன   

3. வெப்சைட்

இதுவே நாம் இணையத்தில் கண்களால் பார்க்கும், நாம் பார்பதற்காக உருவாக்கப்பட்ட சாப்ட்வேர், இதன் மூலமாகவே நாம் தரவிறக்கம் செய்கிறோம், இதனை உருவாக்க கணினியில் பல மொழிகள் பயன்படுத்தப்படும் உதாரணத்திற்கு PHP, ASP.NET

5.      பப்ளிக் ஐ.பி (Public IP)

நாம் இணையத்தில் தொடர்புகொள்ள வேண்டுமென்றால் இந்த ஐ.பி இல்லாமல் நம்மால் இயங்க முடியாது, இணைய முகவரி போல் இதனையும் ப்ரோகர்களிடமே நாம் பெற்றுக்கொள்ளலாம்

ஆக இவை அனைத்தும் பெற்றுவிட்டால் நம்மால் எளிதாக ஒரு இணைய தளத்தை நடத்த முடியும்


தமிழ் ராக்கர்ஸ் எப்படி இயங்குகிறது ?

நாம்முடைய அரசு இந்த இணைய சேவையை நிறுத்த எடுக்கும் முயற்சி :
1.      இணைய முகவரியை பிளாக் செய்வது
2.      அவர்களின் twitter, Facebook ஐ.டி-களை பிளாக் செய்வது

இதனை  தமிழ் ராக்கர்ஸ் எப்படி எதிர்கொள்கிறது ?

1.      ஒரு முகவரியை நிறுத்தினால் இன்னொரு முகவரியை வாங்கி அதில் சேவையை தொடர்வது (உதாரணத்திற்கு tamilrockers.ru பிளாக் செய்தால் tamilrockers.cl)

2.      ட்விட்டர் மற்றும் facebook ஐ.டி-யை பிளாக் செய்தால் புதிதாக ஒன்றை உருவாக்கிக்கொள்வது

தமிழ் ராக்கர்ஸ் எப்படி தன்னுடைய இணையதளத்தை காக்கின்றனர் ?
*பயர் வால்

*IPS

*தன்னுடைய சர்வரை DOS அட்டாக்கில் இருந்து காப்பது

*போலியான தகவல்களை கொண்டு இணைய முகவரி வாங்குவது

*எங்கும் தன்னை பற்றிய தகவலை பதிவிடாமல் இருப்பது

*தனக்கு படங்கள் அளிக்கும் SOURCE தெரியாமல் பார்த்துக்கொள்வது

* இந்தியாவிற்கு வெளியில் இயங்குவது


தொடரும் ....    















No comments:

Post a Comment