Sunday, 12 August 2018

Verify false information using internet

வாட்சப்பில் வரும் பொய் வதந்திகளை சரிபார்ப்பது எப்படி என இப்பதிவில் காண்போம் 

பொதுவாக நமக்கு வரும் போர்வேர்டு மெஸ்ஸஜுகளை உண்மை என நம்பி அடுத்தவருக்கு அனுப்பி விடுவோம், உதாரணத்திற்கு தற்சமயம் வந்த ஆதார் துறையான UIDAI நம்பர் நம்முடைய ஆண்ட்ராய்டு போனில் நமக்குத்தெரியாமல் ஹேக் செய்யப்பட்டு நம்முடைய மொபைலில் உருவாக்கப்பட்டதாக ஒரு மெசேஜ் அனைவரும் பார்த்திருப்பீர்கள் 




இந்த மாதிரி ஒரு மெசேஜ் வந்தால் ..அவசரப்படாமல் நிதானமாக உங்களின் நண்பன் கூகிள் எடுங்கள்


ஆக, இங்கேயே நமக்கு தெரிந்துவிடுகிறது இந்த புரளியின் உண்மை முகம்.

To all my friends, be careful of some msgs in WhatsApp that asks you to put your thumb in a screen to unlock a msg like happy Independence day or happy new year... Beware of these msgs and don't put your thumb anywhere. Scanning your thumb impression will give the app owners access to your biometric data, this is very serious as your Aadhar biometric is linked to PAN, banks etc.. be very careful and spread the message !! cyber crime on the rise now. #TRAI

இதனை சரிபார்க்க அப்படியே காப்பி செய்து கூகிளில் பேஸ்ட் செய்யவும் 




இப்படி ஒவ்வொரு மெசஜையும் அதிகபட்சம் 2 நிமிடம் செலவு செய்து சரிபார்த்தால் தேவையற்ற பதட்டத்தையும், நேரத்தை வீணடிக்காமலும் தவிர்க்கலாம் 

இப்படி போலியான மெசேஜுகளை சில வெப்சைட்டுகள் சரிபார்த்து உண்மை எது என வெளியிடுவார் 

https://check4spam.com/
https://www.facebook.com/youturn.in/
https://www.youtube.com/channel/UCCLsLUlxvfdnRwG8_Uh40Ew

Saturday, 11 August 2018

MOMO CHALLENGE

மோமோ சாலஞ்

 12 வயதுள்ள குழந்தைகள் அல்லது அட்வென்சர் விரும்பிகளை குறிவைக்கும் இந்த மோமோ சாலஞ் ஒரு facebook குரூப்பில் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது, இதனால் அர்ஜன்டீனா-வில் எஸ்கோபார் என்னும் இடத்தில ஒரு சிறுமி தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்டதாய் கூறப்படுகிறது

பார்க: http://www.batimes.com.ar/news/argentina/police-suspect-12-year-old-girls-suicide-linked-to-whatsapp-terror-game-momo.phtml

முதலில் நமக்கு தெரியாத நம்பரில் இருந்து வாட்சாப் கால் வரும் எனவும், அதனை அடுத்து நாம் அந்த நம்பரை தொடர்புகொண்டால் நமக்கு அருவருக்கத்தக்க  படங்கள் அனுப்பப்பட்டு அதனை நிறுத்தவேண்டுமென்றால் அவர்கள் சொல்வதை செய்தாக வேண்டுமென கூறுகின்றனர், இதனை சரி பார்க்க நாமே களத்தில் குதித்தோம்


+81 (Japan)
Colombia (+52)
Mexico (+57)

மோமோவின் நம்பர் என இணையத்தில் தேடியபோது கிடைத்த மேல் குறிப்பிட்ட மூன்று நம்பர்களையும் நானே எனது கைபேசியில் சேமித்தேன்  




எல்லா நம்பரிலும் லாஸ்ட் சீன் ஜூலை மாதமாக உள்ளது, எல்லா நம்பருக்கு மெசேஜ் அனுப்பி பார்த்தேன்




எந்த ரெப்பிளையும் வரவில்லை

மெக்ஸிகோ அரசின் காவல்துறை குழந்தைகளை தெரியாதவர்களிடம் பேசவேண்டாமென அறிவிப்புவிடுத்துள்ளது  



https://twitter.com/UIDIFGETabasco/status/1017541033813409793/photo/1


ஸ்பெயின் போலீஸ் இதனை ஒரு பொய் வதந்தியென கூறியுள்ளது...

https://twitter.com/policia/status/1019568217881239553/photo/1

ஆனால் இந்த மாதிரி நம்பர்களிடமிருந்து அழைப்போ குறுஞ்செய்தியோ வந்தால் ரெபிளை செய்யாமல் அப்படியே விட்டுவிடுவது நல்லது, நாம் ரிப்ளை அனுப்பினால் மட்டுமே நம்மிடமிருந்து அவர்கள் நம்முடைய தனிப்பட்ட பிரைவேட் டேட்டாக்களை திருடமுடியும், பயப்பட ஏதும் இல்லை ஆனால் குழந்தைகளை இதுபோன்ற விபரீந்தங்களிடம் இருந்து அவர்களை காப்பது நல்லது

#momo-challenge

Friday, 10 August 2018

How-to-identify-fake-android-apps

பிளேஸ்டோரில் இருக்கும் பேக் ஆப்-களை கண்டறிவது எப்படி?

ஆண்ட்ராய்டு போன்கள் அதிகமான பயன்பாட்டிற்கு வர வர,  பேக்(Fake) ஆப்-களின் கொட்டமும் அதிகமாகிவிட்டது, அதனால் அதனை கண்டறிவது பற்றி இப்பதிவில் காண்போம்

முன்பெல்லாம் ஆண்ட்ராய்டு பிளே ஸ்டோரில் நிறைய பேக் ஆப்-களை பதிவேற்றிக்கொண்டு இருந்தனர், அதனை சரி செய்ய கூகிள் நிறுவனமே தக்க நடவடிக்கை எடுத்ததனால் கனிசமாக  குறைந்தது, அனால் இன்னமும்  பேக் ஆப்-கள் இருந்துகொண்டுதான் இருக்கின்றன, பெரும்பாலும் அவைகளை சிறிய ஆய்வின் மூலம் கண்டறிந்து விடலாம்

1.கூகிள் பிளே-யில் இல்லாமல் வேறு வெப்சைட்டில் இருந்து நீங்கள் ஒரு ஆப் டவுன்லோட் செய்தால் கண்டிப்பாக அது பேக்-ஆக இருக்கக் கூடும்


2. பெயரில் சிறு மாற்றம் செய்து பிளே ஸ்டோரில் பதிவேற்றிவிடுவார்



3. சில நாட்களுக்கு முன் வாட்சப் போலவே ஒரு ஆப்பை திறமையாக பதிவேற்றி ஏமாற்றினார், அது  1 மில்லியன் டவுன்லோட்-களை பெற்றது

இதில் உள்ள வித்யாசத்தை கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு டெவலப்பர் பெயரின் கடைசியில் ஒரே ஒரு space மட்டும்  விட்டு பதிவேற்றியதால் கூகிளால் கண்டுபிடிக்க முடியவில்லை 



Thursday, 9 August 2018

How-to-gather-information-about-a-phone-number

ஒரு கைபேசி என்னை யாருடையதென கண்டுபிடிப்பது எப்படி

இப்போதெல்லாம் நமக்கு அதிகமான பேக் கால்களும், தெரியாத எண்ணிலிருந்து அழைப்புகளும் அதிகமாக வருகிறதல்லவா, அவர்கள் யார், அவர்களின் நம்பரை பற்றிய தகவலை இணையம் மூலம் எப்படி சேகரிப்பதென பாப்போம்


உதாரணத்திற்கு +91 9003074697 என்ற எண்ணிலிருந்து உங்களுக்கு அழைப்பு வருகிறதென்று வைத்துக்கொள்வோம், இப்போது இந்த எண்ணுக்குரியவர் பற்றிய செய்தியை கீழ் வரும் முறைகளில் தெரிந்துகொள்ளலாம்

1.ட்ரு காலர்

https://www.truecaller.com/search/in/ என்ற உரலியில் அந்த சந்தேகத்திற்குரிய எண்ணை  தேடினால் , சில தகவல்கள் சேகரிக்கலாம்


2.கூகிள் சேர்ச்

3.FACEBOOK

4.Twitter

இப்படி பல வழிகளில் ஒரு தொலைபேசி எண்ணை பற்றி தகவல் சேகரிக்கலாம் 

Wednesday, 8 August 2018

How to identify forgery websites

ஒரு வெப்சைட்டை போர்ஜ்ரி வெப்சைட்டா அல்லது உண்மையான வெப்சைட்டா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

இப்போதெல்லாம் போர்ஜ்ரி வெப்சைட்டுகள் அதிகமாகிவிட்டது , இப்போது BSNL ஆன்லைன் மூலம் ரீசார்ஜ் செய்வதற்கு https://portal.bsnl.in/myportal/ என உள்ளது, அனால் இந்த முகவரியில் சிறிய மாற்றம் செய்து https://portal4.bsnl.in/myportal/  ஏமாற்றுவர், அதனால் கவனம் தேவை


*அதனால் முன்பு கூறியது போல் இந்த வெப்சைட்டின் ஐ.பி அட்ரஸ் BSNL பெயரில் தான் பதிவுசெய்யப்பட்டுள்ளதா எனத் தெரிந்துகொள்ள வேண்டும்

*அடுத்து இந்த போர்ஜ்ரி வெப்சைட்டின் பெயருடன்  consumer complaints என சேர்த்து கூகிள் செய்து பார்த்தால், இந்த வெப்சைட்டின் மேல் வேறு யாரவது புகார் அளித்திருந்தால், இதனை உபயோகிப்பதை உடனடியாக தவிர்க்கவும்

Tuesday, 7 August 2018

How to find IP-Location?

ஒரு ஐ.பி அட்ரஸ் பற்றிய தகவலை எப்படி சேமிப்பது ?


இந்தப் பதிவில் ஒரு பப்ளிக் ஐ.பி பற்றிய தகவலை இணையம் மூலம் அறிந்துகொள்வது எப்படி என முடிந்தவரை விரிவாய் பாப்போம். இங்கு கூறப்படும் அனைத்தையும் தவறான  செயல்களுக்கு பயன்படுத்தினால் அது எனது பொறுப்பல்ல.


ஒரு எடுத்துக்காட்டிற்கு நாம் flipkart பற்றிய தகவலை இணையம் மூலம் கண்டறிவோம் 


முந்தைய பதிவில் கூறியது போல், பிளிப்கார்ட்-டின் ஐ.பி யை கண்டுபிடிக்க அதனை பிங் செய்தால் போதுமானது



பிளிப்கார்ட் ஐ.பி: 163.53.78.128

இப்போது நமக்கு பிளிப்கார்ட் வெப்சைட் வேலைசெய்யும் ஐ.பி கிடைத்துவிட்டது அடுத்து அந்த ஐ.பி பற்றிய தகவலை சேகரிப்போம்

http://www.ipvoid.com/ip-geolocation/

இந்த url சென்று 163.53.78.128 இந்த ஐ.பி-யை கொடுத்தால் 


ஆக இந்த ஐ.பி பிளிப்கார்ட் பெயரில் தான் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது 

அந்த ஐ.பி இருக்கும் இடம் ஆசிய கண்டம், இந்தியா 

மகாராஷ்டிரா பகுதியில் உள்ளது

இதில் கொடுக்கப்படும்  தகவல் ஒரு தோராயமான தகவலாகவே இருக்கும், அதனால் 3 அல்லது நான்கு வெப்சைட்டில் சரிபார்த்துக்கொள்ளவும்

https://www.iplocation.net/
http://www.whatsmyip.org/ip-geo-location/






Sunday, 5 August 2018

Practical-explanation-on-how-internet-works

இணையம் வேலை செய்வது பற்றி ஒரு செயல் விளக்க முறைப்படி பாப்போம், இப்படி பார்க்கும்பொழுது நான் உங்களுக்கு முன் சொன்ன எல்லா கருத்துக்களும், வரையறைகளும் எளிதில் உங்களால் புரிந்துகொள்ளவும், அவைகளை ப்ராக்டிகலாக தெரிந்துகொள்ளவும் இப்பதிவு உதவும்


இணையத்துடன் எனது கணினியை எப்படி இணைத்துள்ளேன் என கூறுகிறேன், அதுவே உங்களின் அடிப்படை புரிதலுக்கு வித்தாக இருக்குமென நம்புகிறேன் 


எனது கணினியை என்னுடைய வயர்லெஸ் ரௌட்டர்-ருடன் இணைத்துள்ளேன், எனது வயர்லெஸ் ரௌட்டரின் SSID : ottharosa (படத்தில் ஒன்று எனக் குறிப்பிட்டிருக்கிறேன்)

அடுத்து பிஸிக்கல் லேயர்படி பாரத்தால்  நான் என்னுடைய ரௌட்டருக்கு நம்பர் 2-இல் குறிப்பிட்டுள்ளது போல் 32,933,242 பைட்டு டேட்டாவை அனுப்புகிறேன் அதே போல் 1,219,312,150 அளவு டேட்டாவை ரௌட்டரிடம் இருந்து பெறுகிறேன் இவை அனைத்தும் ஒரு நொடியில் நிகழ்கின்றன 



அடுத்து லேயர் -2 டாட்டா லிங்க் லேயர்-படி பார்த்தால் என்னுடைய மேக் அட்ரஸ் நம்பர் 3--இல் குறிப்பிட்டுள்ளது 


அடுத்து லேயர் -3 நெட்ஒர்க் லேயர் படி பார்த்தால் என்னுடைய பிரைவேட் ஐ,பி அட்ரஸ் 4-கில் குறிப்பிட்டுள்ளது 

எனது ரௌட்டரின் பிரைவேட் ஐ.பி -192.168.0.1

எனது ரௌட்டரே எனக்கு DNS சர்வராக வேலை செய்கிறது (5)

இப்போது எனது பப்ளிக் ஐ.பி பாப்போம், அதற்கு பிரௌசரில் https://WHatismyip.com ஓபன் செய்தால் போதும் 


 படத்தில் குறிப்பிட்டுள்ளது போல் எனது பப்ளிக் ஐ.பி : 49.206.127.90

இந்த ஐ.பி கொண்டே நான் இணையத்துடன் தொடர்புகொள்கிறேன்


இப்போது http://FLIPKart.com ஓபன் செய்து அதனின் ஐ.பி யை பார்த்து அந்த ஐ.பி யுடன்  நம் கணினி பேசுவதை பாப்போம்

FLIPKart.com ஐ.பி தெரிந்துகொள்ள பிங் செய்தால் போதும்


பிளிப்கார்ட் ஐ.பி :163.53.78.128

இப்போது பிளிப்கார்ட் வெப்சைட்டை பிரவுசரில் ஓபன் செய்து வைத்துக்கொள்கிறேன்



இப்போது "netstat -anb " போட்டால் :

இங்கே பாருங்கள், நம் கணினி பிளிப்கார்ட் ஐ.பி யுடன் போர்ட் 443-யில் உரையாடிக்கொண்டு இருக்கிறது


அடுத்து "route print " என போட்டால், நம் கணினி எப்படி நம்முடைய பாக்கெட்டை அடுத்த கருவிக்கு எடுத்து செல்லும், எது வழியாக எடுத்து செல்லும் என தெரிந்துகொள்ளலாம்



இங்கே குறிப்பிட்டுள்ளது போல, 0.0.0.0 என்றால் என் கணினியில் இருந்து வேறெங்கு சென்றாலும் (ஆங்கிலத்தில் ANY என்று சொல்வார்கள்) அதனை 192.168.0.1 வழியாக அனுப்பவேண்டுமென அந்த ரூல் குறிக்கிறது,இப்போது இணையம் எப்படி வேலை செய்கிறது என ஒரு புரிதலை ஏற்படுத்தியுள்ளேன் என நம்புகிறேன், நன்றி