Friday, 3 August 2018

OSI 7 Layers


இதுவரை நாம் பார்த்த அனைத்தையும் இப்போது ஒன்றாக அடுக்குகளாக நிறுவப்பட்டு , அணைத்து வகையான தகவல் பரிமாற்றத்தையும் தரப்படுத்தி, ஒரு அடுக்குக்கும் இன்னொரு அடுக்குக்கும் இடையில் ஒரு பாலத்தை உருவாக்க நிறுவப்பட்டதே இந்த OSI 7-LAYER MODEL, இன்டர்நெட் என்று கூறுகையில் அதனை விளக்க இவ்வார்த்தையை பயன்படுத்தாமல் விளக்குவது மிகவும் கடினம். இதுவரை இந்த அடுக்குகளைப் பற்றி சொல்லாமல் ...ஒவ்வொரு அடுக்கு பற்றியும் தெளிவாக பார்த்தோம், அவற்றையெல்லாம் நீங்கள் படித்திருந்தால் இந்தப் பதிவு உங்களுக்கு சுலபமாக புரிந்துவிடும்


மேலே படத்தில் கொடுக்கப்பட்டுள்ளத்தை பார்த்தால்  உங்களுக்கே நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிந்து விடும்

OSI மாடலின் கீழிருந்து  முதலாக  வந்தால் நாம் முன்பு பார்த்தது போல் கருவிகளையும் இணைப்பையும் முக்கியமாக ஈதர்நெட் கொண்டு அமைக்கப் படுவதே பிஸிக்கல் லேயர்

சுவிட்ச் மற்றும் ஹப் கொண்டு பிரேம் மூலம் தகவலை தொடர்பு கொள்வதே இரண்டாம் லேயர் (Data-Link  Layer) 

ரௌட்டர் கொன்று ஒரு நெட்ஒர்க்கில் இருந்து இன்னொரு நெட்ஒர்க்கிற்கு தகவலை பாக்கெட் மூலம் கடத்துவதே மூன்றாம் லேயர் (Network Layer)

எந்த முறையில்(TCP/UDP) நம்முடைய தகவல் ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினி செல்லவேண்டுமென முடிவு செய்யும் நான்காம் லேயர்(Transport Layer)

 இரு அப்ளிகேஷன் இடையில் தொடர்பை இந்த லேயரில் இருந்துதான் நிறுவப்படுகிறது , செஷன் எண்ணப்படும் இரு கணினிகளுக்கு இடையே நிஜமான டாட்டா பகிர்வு இந்த லேயரில் தான் ஆரம்பமாகிறது -Session Layer


ஒரு நெட்ஒர்க்கில் அனுப்பும் விதம் இருக்கும் டேட்டாவை அப்ளிகேஷனில் காட்டும் விதமாக மாற்றும் வேலையே இந்த ப்ரெசன்ட்டேஷன் லேயர் செய்கிறது (Presentation Layer)

கடைசி லேயரான அப்ப்ளிகாடின் லேயர் மனிதர்கள் பயன்படுத்த எளிதாக புரிந்துகொள்ளும் வகையில் டேட்டாவை மாற்றி அமைக்கும், இந்த லேயரில் தான் நாம் பயன்படுத்தும் வலைத்தளம், மொபைல் செயலி என அனைத்துமே இயங்குகிறது ..உதாரணத்திற்கு ஒரு பஸ் ஓட்டும் ட்ரைவர் போல நாம் பேருந்தில் பயணிப்பவர் போல நினைத்துக்கொள்ளுங்கள் , பேருந்தில் பயணிக்க நமக்கு பேருந்து ஓட்ட தேவை இல்லை ...அதே போல் ஓட்டுனருக்கு அதன் என்ஜின் எப்படி வேலை செய்கிறது, பெட்ரோல் எப்படி தயாரிக்கப் படுகிறதென தெரியத் தேவை இல்லை, இதையே லேயர் ஆப் அப்ஸ்ட்ரக்ஷன் என்பர் (Layer of abstraction), இதனை அப்படியே OSI லேயருடன் ஒப்பிட்டு பாருங்கள், அவ்வளவே 
  



Thursday, 2 August 2018

User DataGram Protocol (UDP)



மிக எளிமையான ஒரு தகவல் தொடர்பை அமைக்க ஒரு ப்ரோடோகால் தேவைப்பட்டது, TCP நிறைய விதிமுறைகளை கொண்டுள்ளதால் அதனைக் கொண்டு தகவலை அனுப்பவும் பெறவும் நிறைய நேரமும், பொருட் செலவும் ஆனது, TCP ஒரு நம்பகத்தன்மை அதிகமுள்ள ப்ரோடோகால் ...அவ்வளவு நம்பகத்தன்மை தேவை இல்லாத தருணத்தில் உபயோகிக்க உருவாக்கப்பட்டதே UDP


இந்த UDP-யில் ஒரு தகவலை அனுப்பினால் மறுமுனையில் அது அடைந்து விட்டது என எந்த அறிவிப்பும் வராது ..உதாரணத்திற்கு ரேடியோ போல...ரேடியோவில் ஒருவர் மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்பர் ..மறுமுனையில் மக்கள் அதை கேட்கிறார்கள் அல்லது யாரும் கேட்கவில்லை என எந்த அறிவிப்பும் அவருக்கு வராது அதுபோலவே இயங்குகிறது இந்த UDP , அதனால் TCP-யில் இருப்பது போல்  3-WAY HANDSHAKE இதில் இல்லை


இந்த ப்ரோடோகால்  தகவல் உடனடியாக பெருநரிடம் போய் சேரவேண்டும் நடுவில் சில பாக்கெட்டுகள் தொலைந்தாலும் பரவாயில்லை என ஏற்றுக்கொள்ளும்  அப்ளிகேஷன்களுக்கு மட்டுமே சரியாக வரும்

முன்பு கூறியது போல் லைவ் ஸ்ட்ரீம் செய்யும் பொழுது இந்த UDP சரிவர காரணம் ...விடியோவை அனுப்பும்பொழுது நடுவில் எதாவது ஒரு பாக்கெட் தொலைந்தால் கூட வீடியோவில் மில்லி செகண்ட் அளவுக்கே தொலைந்துபோகும் ...அது மனித கண்களுக்கு எந்த ஒரு மாற்றத்தையும் காமிக்காது




Tuesday, 31 July 2018

TCP and UDP Port





நீங்கள் தினமும் உபயோகிக்கும்  இணையதளத்திலிருந்து கைபேசியில் உபயோகிக்கும் ஷேர்இட் வரை இது இல்லாமல் இயங்கமுடியாது, அதுதான் சாப்ட்வேர் போர்ட் , இதை வைத்தே இணையமே இயங்குகிறது என்று சொன்னால் அது மிகை ஆகாது

இந்த போர்ட் என்பதை எளிதில் புரிந்துகொள்ள நான் முன் சொன்ன எடுத்துக்காட்டை மனதில் நிறுத்திக்கொள்ளுங்கள், உங்கள் தபால் உங்களின் வீட்டிற்கு தபால்காரர் எடுத்து வருகிறார் ஆனால் உங்கள் வீடு அபார்ட்மெண்டில் ஒரு வீடாக இருக்கும்பொழுது உங்களுடைய வீட்டிற்கென ஒரு நம்பர் இருக்குமல்லவா அதுபோலவே உங்களுடைய ஐ.பி-க்கு ஒரு தகவல் வந்தாலும் அது எந்த போர்ட்-க்கு வருகிறதென்பதை வைத்தே அது எங்கு சேரவேண்டுமென முடிவு செய்யப்படும்


போர்ட் என்பது 16 பிட் கொண்ட  0 முதல் 65535 நம்பர்கள் கொண்டது, இதில் முன் கூறியது போல் TCP மற்றும் UDP PORT என தனித்தனியே PORT நம்பர் உள்ளது , அதாவது

0-65535(TCP)
0-65535(UDP)

இதில் நாம் எப்போதும் பயன்படுத்தும் இணையதள வலைத்தளங்கள் TCP PORT 80-யில் வேலை செய்யும் அல்லது  TCP PORT 443 யில் வேலை செய்யும்

இப்போது சிறிய செயல்பாட்டின்மூலம் நம்முடைய கணினியில் என்னென்ன போர்ட் உள்ளது, எது எந்த நிலையில் உள்ளதெனப் பார்க்க சிறிய செயல் உங்களுடைய கணினியில் கமாண்ட் ப்ராம்ப்ட் ஓபன் செய்துகொண்டு netstat -an என டைப் செய்யுங்கள்

இப்போது உங்கள் கணினியில் என்னென்னெ போர்ட் ஓபன் ஆகி உள்ளது எனத் தெளிவாகத் தெரியும்

*முதல் வரிசையில் உள்ளது tcp அல்லது udp என்பதை குறிப்பது


*இரண்டாவது லோக்கல்  அட்ரஸ் (Local address)- இது நம் கணினி மற்ற கணினிகளுடன் தொடர்புகொள்ள பயன்படுத்தும் ஐ.பி அட்ரஸ்,


*மூன்றாவது பாரின் அட்ரஸ் (Foreign Address)- இது நம் கணினிஎந்தக் கணினியை தொடர்புகொள்கிறதோ அதனின் ஐ.பி அட்ரஸ்


*நான்காவது ஸ்டேட் (State)-இது அந்த தொடர்பின் நிலையை குறிக்கும்

இதில் அந்தப் படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட இடத்தை பாருங்கள், அதுதான் போர்ட்(Port)

முதல் வரி 0.0.0.0 என்னும் ஐ.பி அட்ரஸில் tcp port 80-இல் யார் வேண்டுமானாலும் தன்னுடன் கனக்ட் செய்துகொள்ளலாம் எனக் குறிக்கிறது


இந்தப் படத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதை பாருங்கள், இங்கு 192.168.0.109 என்னும் ஐ.பி தன்னுடைய 42344 என்னும்  tcp port மூலம் 52.230.80.159 என்னும் ஐ.பி-யுடன் 443 என்னும் tcp port-இல் இணைந்துள்ளது

YOUTUBE  எனப்படும் வீடியோ ஷாரிங் இணையத்தளம் லைவ் ஸ்ட்ரீமிங்கை UDP COMMUNICATION-ஐ உபயோகித்து எப்படி  செய்கிறதென்பதை  பற்றி அடுத்த பதிவில் காண்போம்





Transmission control protocol (TCP)


இதுவரை கருவிகளுக்குள் எப்படி ஒரு தகவல் பரிமாறப்படுகிறதென பார்த்தோம், இப்போது கருவிகளையும் தாண்டி இரு கணினிகள் எப்படிப்  பேசிக்கொள்கின்றன என்பது பற்றி தெளிவாக பாப்போம், இரு கணினிகள் பல்வேறு முறையில் பேசிக்கொள்ளும், அதற்கு பேசுவதற்கான தேவை நிறைய இருக்கும்

* ஏதோ ஒரு டாகுமெண்ட்  வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு அனுமதி வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு சேவை வேண்டி தொடர்பு கொள்ளலாம்
* ஏதோ ஒரு சேவையை அளிக்கத் தொடர்பு கொள்ளலாம்

இப்படி பல்வேறு விதமான தேவைகளை பூர்த்திசெய்வதற்கு தொடர்புகொள்ள இரண்டே இரண்டு வழியைத்தான் பயன்படுத்துகிறது , அஃது டீ.சி.பி (TCP) ,மற்றும் யு.டி.பி(UDP)


இந்த இரண்டும் எப்படி இரு கணினிகளின் தேவைகளை பூர்த்தி செய்கிறதென்பதை புரிந்துகொள்ள இந்த தொழில்நுட்பம் எப்படி இவைகளை சாத்தியப்படுத்துகிறதென்பதை பாப்போம்

Transmission control protocol (TCP)

இது ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினிக்கு தகவல் எங்கும் தவறவிடாமல் பரிமாற இந்த ஒரு தொழிநுட்பமே அதிகம் பயன்படுத்தப்படுகின்றது

ப்ரோடோகால் என்பது ...ஒரு தகவல் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு செல்ல சில வழிமுறைகளை பின்பற்றவேண்டும்...அப்படி உருவாக்கப்பட்ட விதிகளையே ப்ரோடோகால் என்பர்

சாலையில் நாம் செல்ல எப்படி சாலை விதிகள் உள்ளதோ அதே போல ஒரு கணினியில் இருந்து இன்னொரு கணினி செல்லவும் சில விதிமுறைகள் உள்ளன ..அதுவே ப்ரோடோகால் எனப்படும்


TCP-யின் விதிமுறைகள்:

*இங்கு சர்வர் (அளிப்பவர்/அனுப்புனர்)-கிளைன்ட்(பெறுபவர்) என இரு பகுதி இருக்க வேண்டும்

*யார் யாரிடம் தகவல் அனுப்ப விரும்பினாலும் முதலில் பெறுநர் தான் அனுப்பும் தகவலை வாங்க தயாராக உள்ளாரா என முன்னரே உறுதிப்படுத்திகொண்டு தகவலை அனுப்ப வேண்டும், அப்படி உறுதிப் படுத்த முதலில் SYN எனப்படும் பாக்கெட்டை அனுப்ப வேண்டும் 
*பெறுநர் தகவல் பெற தயாராக இருந்தால் உடனே அனுப்புனரிடம் syn-ack எனப்படும் பாக்கெட்டை அனுப்பி கூற வேண்டும்
*அதன் பின்பே தகவல் பரிமாற்றம் ஆரம்பமாகும்

இதன் பெயரே 3-வே ஹேண்ட்ஷேக் என்பர் (3-WAY HANDSHAKE)


Monday, 30 July 2018

ஒரு ரௌட்டர் எப்படி இரு நெட்ஒர்க்-குகளை ஒன்றிணைக்கிறது ???


இதற்கு முன் ஈதர்நெட் பிரேம் எப்படி உருவாகி ஒரு சுவிட்ச்-இல் இருந்து இன்னொரு ஸ்விட்சிற்கு செல்கிறது எனப் பார்த்தோம்...இப்போது அதே போல் ஒரு பாக்கெட் எப்படி உருவாகி ஒரு நெட்ஒர்க்-இல் இருந்து இன்னொரு நெட்ஒர்க்-கிற்கு செல்கிறதென்பதை பற்றிப் பாப்போம்

நாம் டெல்லியில்  இருந்து கும்பகோணத்திற்கு தபால் அனுப்பினால் அது என்னென்ன நிலைகளை அடையும் எனப் பாப்போம் அதை கணினி மூலம் செல்லும் தகவலுடன் ஒப்பிடுவோம்


நாம் அனுப்பும் தபால் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு செல்லும்..அங்கே இருந்து ரயிலில் திருச்சி செல்லும் ...திருச்சியில் இருந்து கும்பகோணம்.பல்வேறு கும்பகோணம் போஸ்ட் மாஸ்டரிடம் இருந்து  நம்மிடம் வந்து செருமல்லவா...அதே போல்


நாம் அனுப்பவேண்டிய செய்தி ஒரு நெட்ஒர்க் பாக்கெட்டின்  நடுவில் உக்கார்ந்துகொள்ளும் (தபால் தலைக்குள் நமது கடிதம் போல் )



இப்போது படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது போல் ஒரு லேப்டாப் 0 லேப்டாப் 3-க்கு ஒரு தகவலை அனுப்பினால் அதனை அங்குள்ள சுவிட்ச் அலசி பார்த்துவிட்டு ரௌட்டரிடம் அனுப்பும்

இப்போது நெட்ஒர்க் பாக்கெட் ரௌட்டர் மூலம் இன்னொரு நெட்ஒர்க்-கிற்கு அனுப்பப் பட்டுவிடும் ...அங்கே நம்முடைய பாக்கெட் பிரிக்கப் படும் (  சென்ட்ரல்-லில் இருந்து திருச்சி செல்ல முடிவெடுப்பதுபோல் )


நம்முடைய நெட்ஒர்க் பாக்கெட்டை பிரித்தால் உள்ளே நாம் எந்த ஐ.பி-க்கு அனுப்புகிறோமோ அதனை அடைய என்ன வழி என்பதை ரௌட்டர் முடிவு செய்து அந்த வழியில் அந்த பாக்கெட்டை அனுப்பும் ( சென்னையில் இருந்து திருச்சிக்கு ரயிலில் அனுப்புவது போல் )

இப்போது அந்த பாக்கெட் அங்குள்ள சுவிட்ச்-சின் கையில் வந்தடையும் ...அந்த சுவிட்ச் வந்துள்ள பாக்கெட்டின் இலக்கு (destination) ஐ.பி யை பார்த்து ..அது எந்த மேக் அட்ரஸ்க்கு  சொந்தமானது என தன்னுடைய மெமரியில் தேடி கண்டுபிடிக்கும் , இதன் பெயரே அட்ரஸ் ரெஸலுஷன்(Address resolution) என்பர் (தபால் கும்பகோணம் வந்த பிறகு, நம்முடைய வீடு எங்குள்ளது எனக் கண்டுபிடிப்பதுபோல்)
இந்த படத்தில் இடது புறம் உள்ள சுவிட்ச் அதன் இடது பக்கம் உள்ள கணினிக்கு அனுப்புவதா அல்லது வலது பக்கம் அனுப்புவதா என முடிவு செய்வதுபோல் 

இப்போது அந்த மேக் அட்ரஸ் எந்த போர்டில்(port) உள்ளது என தன்னுடைய மேக் டேபிள்-லில் பார்த்து அந்த போர்ட்டிற்கு(Port) அனுப்பும்(நம்முடைய போஸ்ட் மென் நம் வீட்டிற்கு எப்படி வருவது என பார்த்து வருவது போல் )


இப்படித்தான் நம்முடைய தகவல் பல கருவிகளை தாண்டி இன்னொரு கணினியை சென்றடைகிறது

Sunday, 29 July 2018

பிரைவேட் ஐ,பி அட்ரஸ் (Private network IP ADDRESS )


பொதுவாக  எந்த நிறுவனத்திற்கு  இணைய சேவை வேண்டுமோ அவர்கள் ஒரு ஐ.பி அட்ரஸ் பணம் கொடுத்து வாங்கிக்கொள்வர், இப்படி ஒவ்வொரு அட்ட்ரஸும் ஒவ்வொரு நிறுவனத்திற்கு கீழ் பதிந்திருக்கும், ஆனால் எந்த நிறுவனமும் சாராமல் பொதுவான அனைவரும் உபயோகிக்கும் வகையில் சில அட்ரெஸ்ஸை ஒதுக்கியுள்ளனர், அவையே பிரைவேட் ஐ.பி அட்ரஸ்


--192.168.0.0 - 192.168.255.255 (65,536 IP addresses)
--172.16.0.0 - 172.31.255.255 (1,048,576 IP addresses)
--10.0.0.0 - 10.255.255.255 (16,777,216 IP addresses)

ஒரு நெட்ஒர்க் என்பது ஐ.பி அட்ரஸ் படி பிரிக்க வேண்டுமென்றால் பொதுவாக ஒரு நெட்ஒர்க்கில் 255 ஆக பிரிக்கலாம் உதாரணத்திற்கு 192.168.1.0-192.168.1.255 இதில்

192.168.1.0 என்பது அந்த நெட்ஒர்க்கின் பெயர்..இதனை எந்த கருவிக்கும் பொருத்த முடியாது, அதுபோல 192.168.1.255 என்பது சில செய்திகளை எல்லா கணினிகளுக்கும் தகவல் பரப்ப பயன்படுத்தப்படும், அதனால் அந்த ஐ.பி அட்ரெஸையும் உபயோகிக்க முடியாது..அதனால் 192.168.1.1 முதல் 192.168.1.254 வரை மட்டுமே பயன்படுத்த தகுதி உடையது.

ஒரு நெட்ஒர்க் என்பதை குறிக்க அது எங்கு தொடங்கி எங்கு முடியும் என்பதையும் சேர்த்தே குறிப்பிட வேண்டும் ..அதனை குறிக்க பயன்படுத்தும் சொற்றாடல் சப்நெட் மாஸ்க் (subnet mask). இப்போது ஒரு  நெட்ஒர்க்கில் 254 கருவிகள் இணைக்க வேண்டுமென்றால் 255.255.255.0 என்பது அதன் சப்நெட் மாஸ்க்-காக இருக்கவேண்டும், அதுபோல ஐபி அட்ரஸின் 4 அக்டேட்-களில் சிலது மாறும் சிலது மாறாது

மாறுவது -  ஹோஸ்ட் பிட்
மாறாதது  - நெட்ஒர்க் பிட்

இப்போது 192.168.1.0-வில்

இதில் 192.168.1(நெட்ஒர்க் பிட்(network bit))
.0(ஹோஸ்ட் பிட்(host bit)

192.168.1.0-192.168.1.255

இதன் சப்நெட் மாஸ்க் 255.255.255.0 ( இதுவே முதல் மூன்று அக்டேட் மாறாமல் இருப்பதை குறிக்கிறது )

இங்கு பார்த்தால் ஹோஸ்ட் பிட் ஒன்று முதல் 255 வரை மாறும்.

ஸ்விட்சில் மேக் அட்ரஸ் வைத்து பிரேம் உருவாக்குவது போல், இந்த ஐ.பி அடிரெஸ்ஸை வைத்து ஐ.பி பாக்கெட் (IP PACKET) உருவாக்கப்படும்.



ஒரு நெட்ஒர்க் சுவிட்ச் ஒரே நெட்ஒர்க்-குக்கு கீழ் உள்ள கணினிகளை ஒன்றிணைக்கும்.  ஒரு ரௌட்டர் இரு நெட்ஒர்க்-குகளை இணைக்கும் பாலமாக செயல்படும்
இவைகளை வைத்தே இணையம் அல்லாத தனியான ஒரு நெட்ஒர்க் வேலை செய்கிறது, இதுவரை ஒரு ரௌட்டர் எப்படி வேலை செய்கிறது என்பதை புரிந்துகொள்ளத் தேவையான அணைத்து சித்தாத்தங்களையும் புரிந்துகொண்டோம், இப்போது ரௌட்டர் பற்றி ...


இங்கே படத்தில் கொடுக்கப் பட்டுள்ளது போல  192.168.1.0 என்பது ஒரு நெட்ஒர்க் 192.168.2.0 என்பது வேறு, இந்த இரண்டையும் இணைக்கும் கருவிதான் ரௌட்டர்..ரௌட்டர் எப்படி இந்த இணைப்பை சாத்தியப்படுகிறது என்பதை அடுத்தப் பதிவில் காண்போம்  

Saturday, 28 July 2018

ரௌட்டர்(Router)


இணையம் என்று சொல்லும்போது உலகமே இணையக்  காரணமே இந்தக் கருவி தான். ஆம் உலகத்தில் பல்வேறு வகையான நெட்ஒர்க் இருக்கும் உதாரணத்திற்கு வீட்டிற்குள் வயர்லெஸ் அல்லது லோக்கல் ஏரியா நெட்ஒர்க் , இரு நகரங்களை இணைக்கும் மெட்ரோ பாலிடன் நெட்ஒர்க், உலகத்தை இணைக்கும் கடலுக்கடியில் செல்லக்கூடிய சப்மரைன் நெட்ஒர்க், வான் வழியாக உலகத்தை இணைக்கும் சாட்டிலைட் நெட்ஒர்க் என பல்வேறு நெட்ஒர்க்-குகளை ஒன்றாக இணைக்கும் ஒரே கருவி தான் இந்த நெட்ஒர்க் ரௌட்டர்



சுவிட்ச்களில் எப்படி ஒரு கணினியை அடையாளம் காண மேக் அட்ரஸ் உதவியதோ அதே போல இந்த ரௌட்டர் கருவிகளுக்குள் அடையாளம் காண அதெற்கென ஒரு தனி பெயரை உருவாக்கினார்கள் அதுவே ஐ.பி அட்ரஸ் (IP ADDRESS). ரௌட்டர் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்பதற்கு முன் இந்த ஐ.பி அட்ரஸ் பற்றி பார்த்து விடுவோம்

* இது  32 பிட் அளவு கொண்டது, 8 ஆக்டெட்டாக பிரித்தால் 4  ஆக்டேட்
* இது இரண்டு வகைப்படும் பப்ளிக் அட்ரஸ்(PUBLIC IP ADDRESS), பிரைவேட் அட்ரஸ்(PRIVATE IP ADDRESS)
* உலகத்தில் உள்ள அனைத்து கருவிகளுக்கும் இணையத்துடன் இணைய பப்ளிக் அட்ரஸ் தேவை
* இதை மூன்று புள்ளிகள் கொன்று பிரிப்பார்கள், அதாவது (xxx.xxx.xxx.xxx)
* இது 0.0.0.0 வில் ஆரம்பித்து 255.255.255.255 என்பதுடன் முடிவடைகிறது
* அதாவது

0.0.0.0
0.0.0.1
0.0.0.2
......
.
.
.
0.0.0.255
0.0.1.0
0.0.1.1
.....
.
.
.
0.0.1.255
.....
.
.
.
255.255.255.255

இந்த வாக்கில் மொத்தம் 4294967296 (2பவர்32) ஐ.பி அட்ரஸ் உள்ளது

இந்த ஐ.பி அட்ரஸ் அனைத்தையும் நாம் உபயோகிக்க முடியாது, இதில் எதை நாம் உபயோகப் படுத்தலாம் என IANA என்னும் அமைப்பு முடிவு செய்து இந்த ஐ.பி அட்ரஸ்-களை 5 வகுப்புகளாக பிரித்தனர்

CLASS A

CLASS B

CLASS C

CLASS D

CLASS E


இதில் கிளாஸ் டி மற்றும் ஈ நம்முடைய பயன்பாட்டிற்கு அனுமதியில்லை

இந்த ஐ.பி கொன்று ரௌட்டர் எப்படி வேலை செய்கிறதென்பதை அடுத்த பதிவில் காண்போம்