Saturday, 28 July 2018

ரௌட்டர்(Router)


இணையம் என்று சொல்லும்போது உலகமே இணையக்  காரணமே இந்தக் கருவி தான். ஆம் உலகத்தில் பல்வேறு வகையான நெட்ஒர்க் இருக்கும் உதாரணத்திற்கு வீட்டிற்குள் வயர்லெஸ் அல்லது லோக்கல் ஏரியா நெட்ஒர்க் , இரு நகரங்களை இணைக்கும் மெட்ரோ பாலிடன் நெட்ஒர்க், உலகத்தை இணைக்கும் கடலுக்கடியில் செல்லக்கூடிய சப்மரைன் நெட்ஒர்க், வான் வழியாக உலகத்தை இணைக்கும் சாட்டிலைட் நெட்ஒர்க் என பல்வேறு நெட்ஒர்க்-குகளை ஒன்றாக இணைக்கும் ஒரே கருவி தான் இந்த நெட்ஒர்க் ரௌட்டர்



சுவிட்ச்களில் எப்படி ஒரு கணினியை அடையாளம் காண மேக் அட்ரஸ் உதவியதோ அதே போல இந்த ரௌட்டர் கருவிகளுக்குள் அடையாளம் காண அதெற்கென ஒரு தனி பெயரை உருவாக்கினார்கள் அதுவே ஐ.பி அட்ரஸ் (IP ADDRESS). ரௌட்டர் எப்படி வேலை செய்கிறது எனப் பார்ப்பதற்கு முன் இந்த ஐ.பி அட்ரஸ் பற்றி பார்த்து விடுவோம்

* இது  32 பிட் அளவு கொண்டது, 8 ஆக்டெட்டாக பிரித்தால் 4  ஆக்டேட்
* இது இரண்டு வகைப்படும் பப்ளிக் அட்ரஸ்(PUBLIC IP ADDRESS), பிரைவேட் அட்ரஸ்(PRIVATE IP ADDRESS)
* உலகத்தில் உள்ள அனைத்து கருவிகளுக்கும் இணையத்துடன் இணைய பப்ளிக் அட்ரஸ் தேவை
* இதை மூன்று புள்ளிகள் கொன்று பிரிப்பார்கள், அதாவது (xxx.xxx.xxx.xxx)
* இது 0.0.0.0 வில் ஆரம்பித்து 255.255.255.255 என்பதுடன் முடிவடைகிறது
* அதாவது

0.0.0.0
0.0.0.1
0.0.0.2
......
.
.
.
0.0.0.255
0.0.1.0
0.0.1.1
.....
.
.
.
0.0.1.255
.....
.
.
.
255.255.255.255

இந்த வாக்கில் மொத்தம் 4294967296 (2பவர்32) ஐ.பி அட்ரஸ் உள்ளது

இந்த ஐ.பி அட்ரஸ் அனைத்தையும் நாம் உபயோகிக்க முடியாது, இதில் எதை நாம் உபயோகப் படுத்தலாம் என IANA என்னும் அமைப்பு முடிவு செய்து இந்த ஐ.பி அட்ரஸ்-களை 5 வகுப்புகளாக பிரித்தனர்

CLASS A

CLASS B

CLASS C

CLASS D

CLASS E


இதில் கிளாஸ் டி மற்றும் ஈ நம்முடைய பயன்பாட்டிற்கு அனுமதியில்லை

இந்த ஐ.பி கொன்று ரௌட்டர் எப்படி வேலை செய்கிறதென்பதை அடுத்த பதிவில் காண்போம் 

Friday, 27 July 2018

பாக்கெட் டாட்டா ட்ரான்ஸ்மிசன் (Packet Data Transmission)



ஒரு ஈதர்நெட் கேபிள் வழியாக நம்முடைய தகவலை அனுப்பும்பொழுது அது இன்னொருவருக்கு நாம் அனுப்பும் விதமே சென்றடைகிறதென சரியாக கூறமுடியாத நிலை இருந்தது..அதுபோக ஒவ்வொரு முறையும் அடுத்தவர் டாட்டாவை அனுப்பும் வரைக் காத்திருந்து அதன்பின் நம்முடைய டேட்டாவை அனுப்ப நேரமெடுத்தது .அதுமட்டுமல்லாமல் சிக்னல் நடுவில் தடைபடுவதால் டாட்டா தொலைந்துகொண்டே வந்தது...இதனை சரி செய்யவே பிரேம் (Ethernet Frame) என்னும் ஒரு வரைமுறையை உண்டாக்கினார்

ஒரு ஈதர்நெட் பிரேம் என்பது மொத்தம் 64 பைட்(byte) கொண்டது, இதில் எங்கு அந்த பிரேம் செல்லவேண்டுமென்னும் இலக்கும்(destination) மேக் அட்ரஸ் மற்றும் எங்கிருந்து வருகிறது என்னும் மூலமும்(Source) மேக் அட்ரஸ்ஸும் என்னமாதிரியான ஈதர்நெட் பிரேம் என்பதைக் குறிக்க டைப் பீல்டு (Type Filed), டேட்டாவை அனுப்ப டாட்டா பீல்டு, மற்றும் மேற்கூறிய காத்திருக்கும் பிரச்னையை சரி செய்ய பிரேம் செக் சீக்குவ்னஸ் (Frame Check Sequence) என்னும் பீல்டு உள்ளது.


ஒரு ஈதர்நெட் கேபிள் வழியாக ஒரு பாக்கெட் செல்ல வேண்டி இன்னொரு பாக்கெட் காத்திருக்காமல் இருக்க ஒவ்வொரு பாக்கெட்டுக்கும் ஒரு வரிசை எண் அளிக்கப்படும்.இதன் மூலம் அந்தப் பிரேமை பெறுபவர் அந்த எண்ணை வைத்து வரிசைப் படுத்தி எளிதில் இனம்கண்டுகொள்வர் ..அதுமட்டுமல்லாமல் FCS தொழில்நுட்பம் மூலம் ஒரு ஒரு பிரேமை அனுப்பும் முன் அந்தப் பிரேமை வைத்து சிறு கோட் வோர்ட் ஒன்றை உருவாக்குவார் ...அந்தக் கோட் வோர்டை அந்த பிரேமை பெரும் கணினி டீகோட் செய்யும்...அப்படி செய்யும் பொழுது அந்த வார்த்தையும் அனுப்புனர் அனுப்பிய வார்த்தையும் ஒன்றாக இருந்தால் ...அனுப்பிய தகவல் நடுவில் எந்தத்  தொந்தரவும் மாற்றமும் இல்லாமல் செய்தி வந்தடைந்தது என உறுதிப்படுத்தும்.

இப்படி ஒரு ஸ்விட்சில், அதனுடன் இணைக்கப்பட்ட கருவிகளுக்குள்  எளிதில் தொடர்புகொள்ள முடிந்தது...காலம் செல்ல செல்ல ..இந்த நெட்ஒர்க் பெரிதாக ஆரம்பித்தது..அப்போது வெவேறு நெட்ஒர்க்குகளை இணைக்க ஒரு கருவி தேவைப் பட்டது..அந்தத் தேவையை பூர்த்தி செய்யவே ரவ்ட்டர் (Router) பிறந்தது. ரௌட்டர் பற்றி அடுத்தப் பதிவில் பாப்போம்.


   

Thursday, 26 July 2018

மேக் அட்ரஸ்(MAC ADDRESS)



நம் எல்லோருக்கும் எப்படி ஒரு தனி முகவரி இருக்கிறதோ அதுபோல் இணையம் செயல்படப் பயன்படும் அணைத்து கருவிகளுக்கும் தனி முகவரி தேவை, அதனை பூர்த்திசெய்யவே இந்த மேக் அட்ரஸ் பிறப்பெடுத்தது.  நாம் நமக்குள் உணர்வுகளை, தகவல்களைப் பரிமாறிக்கொள்ள மொழியைப் பயன்படுத்துவதுபோல்..இந்த கருவிகள் மற்ற கருவியிடம் உரையாட ஒரு மொழி கட்டமைப்பை உருவாக்கியது ISO(International Organization for Standardization)..அந்த திட்டத்திற்கு OSI(Open Systems Interconnection) எனப் பெயர் சூட்டியது, அந்தக் கட்டமைப்பை நாம் புரிந்துகொண்டால் மட்டுமே நம்மால் இந்தக் கருவிகள் பேசும் மொழியை புரிந்துகொள்ள முடியும்.


முதலில் இந்த மேக் அட்ரஸ்ஸின் வரையறை பற்றிப் பாப்போம், இது மொத்தம் 48 பிட்டுகள் கொண்டது 8 பிட்டை 1 அக்டேட் எனக் கூறுவர்...ஆக மேக்  அட்ரஸ் என்பது 8 ஆக்டேட் கொண்டது.உங்களுடையக் கணினியின் மேக் அட்ரஸ் தெரிந்துகொள்ளும் விதம் அதன் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பொருத்து வேறுபடும். விண்டோஸ் சிஸ்டம்களில் கமண்ட் ப்ராம்ப்ட் ஓபன் செய்து ipconfig /all என டைப் செய்தால் ...மிக நீண்ட பதில் வரும் அதில் நம்முடைய நெட்ஒர்க் (ஈதர்நெட்-ஆகவோ அல்லது வயர்லெஸ்-ஆகவோ இருக்கலாம்) அந்த தலைப்புக்கு கீழ் உள்ள பிஸிக்கல் அட்ரஸ் (Physical Address) அருகில் உள்ள 8 ஆக்டெட்தான் உங்களது மேக் அட்ரஸ்



இந்த மேக் அட்ரஸ் வைத்தே உங்களுடைய கணினியை மற்ற கருவிகள் மிக எளிதாக இனங்கண்டு, உங்கள் கருவி இருக்கும் இடத்தையும் கண்டுகொள்ளும்.தற்போது இரு கணினிகள் பேச நினைத்தால் ஒரு ஈதர்நெட் கேபிள் கொண்டு இணைத்துவிடலாம், இதுவே இரண்டிற்கும் மேற்பட்ட கணினிகள் பேச நினைக்கும் பொழுது ...அவை அனைத்தும் ஒரே தொடர்பில் இருக்கவைப்பது ?

இவைகளுக்கு பதில் கூறவே ஹப் எனப்படும் கருவியை உருவாக்கினார்கள். இந்த நெட்ஒர்க் ஹப் பலக் கணினியை ஒரே தொடர்பில் இணைத்து, அவைகளுக்குள் பேசிக்கொள்ள உதவும் கருவியாய் அமைந்தது. ஆனால் இதற்கு ஒரு தகவல் ஒரு கணினியில் இருந்து வந்தால் அதனை எல்லாக் கணினிகளுக்கும் அனுப்பிவிடும், சுருக்கமாக சொன்னால் நம்மூர் தெருவில் உக்கார்ந்திருக்கும் மூதாட்டிகளைப் போல்..இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் பாருங்கள்



பிரெட் என்பவன் பெட்டி என்பவளுக்கு பிரியமாய் ஏதோ அனுப்புகிறான் ..ஆனால் இந்த நெட்ஒர்க் ஹப் அதை எல்லாரிடமும் கூறிவிட்டது. இந்தப் பிரச்னையை சரி செய்யவே சுவிட்ச் என்னும் கருவி உருவாக்கப்பட்டது



இந்த சுவிட்ச் என்பது அதன் ஒவ்வொரு போர்ட்டிலும்(Port) எந்தக்  கருவி உள்ளதென தனது அட்டவணையில்(MAC TABLE) அந்தக் கருவியின் மேக் அட்ரஸ்ய்யும், அந்தக் கருவி இணைக்கப் பட்டிருக்கும் ஈதர்நெட்  போர்ட் எண்ணையும் இணைத்துக் குறித்து வைத்துக் கொள்ளும். ஒரு தகவலை வாங்கும்பொழுதே யாருக்கு அனுப்பவேண்டும் எனக் கேட்டு வாங்கிக் கொண்டு, அந்த அட்டவணையில் எந்த ஈதர்நெட் போர்ட்டில்  குறிப்பிடப்பட்ட மேக் அட்ரஸ் உள்ளதோ அதற்கு மட்டும் அந்த செய்தியை அனுப்பும்.


இரவு 8 முதல் 9 வரை நியூஸ் சேனல் பார்ப்பதுண்டா, அப்படி பார்ப்பீர்களானால் நான் அடுத்துக்  கூறப் போகும் பிரச்னையை எளிதில் புரிந்துகொள்வீர்...ஒரு 5 பேர் உக்காத்துகொண்டு ஒரு தலைப்பில் விவாதம் செய்வர் ...அப்போது ஒருவரை இன்னொருவர் பேச விடாமல் செய்வதென நினைத்துக் கொண்டு சத்தமாக பேசிப் பேசி பார்ப்பவர்களுக்கு ஒன்றுமே புரியாமல் வெறும் சத்தம் மட்டுமே காதில் விழும்.அளவுக்கு சென்று வெளிநடப்பு செய்வர்...இப்படிப் பட்ட பிரச்சனை ஒரே நெட்ஒர்க்கில் இணைக்கப் பட்டிருக்கும் கணினிகளுக்குள்ளும்  வரும் அதன் பெயரே கொலிசன் தமிழில் மோதல் எனக் கூறலாம்.

இப்படி மோதல் ஏற்படாமல் தவிர்ப்பதற்கு பல்வேறு யுத்திகள் கையாளப் பட்டது, அதனை மோதலை நிராகரித்தல் (கொலிசன் ஆவாய்ட்னஸ் collison avoidance) மற்றும் மோதலை வருமுன் கண்டறிதல் (கொலிசன் டீடெக்ட்சன் collison detection ) என்னும் வழிமுறைப் படி தடுத்தனர். நீங்கள் CDMA போன் எனக் கேள்விப்பட்டிருப்பீர்கள்..அது இந்தத் தொழில்நுட்பம் கொண்டே செயல்படுகிறது...எளிதாகச் சொன்னால் நீங்கள் உங்கள் நண்பரின் கைப்பேசிக்குக் அழைப்பு விடுகிறீர்கள்..அப்போது அவர் வேறொருவருடன் பேசிக்கொண்டிருந்தால் உங்களால் பேச முடியாது அல்லவா...அதுவே கேரியர் சென்ஸ் மல்டிபிள் அக்சஸ் ..அதாவது தொடர்பில் யாரவது இருக்கிறார்களா எனத் தெரிந்துகொண்டு அடுத்தவர் முடிக்கும் வரை காத்திருந்து பின் பேசுவது.
ஒரு நேரத்தில் இந்தத் தொழிநுட்பமும் ஓத்துவராமல் போனது...அப்போது உருவானது தான் பாக்கெட்டேட்டா டிரான்ஸ்மிஷன்(PACKET DATA TRANSMISSION). அதைப் பற்றி அடுத்த பதிவில் காண்போம்



 

  

Wednesday, 25 July 2018

ஈதர்நெட்(ETHERNET)


என்னைப் பொறுத்தவரையில் இன்டர்நெட் செயல்பட முக்கியமானத் தேவை என்னவெனக் கேட்டால், நான் ஈதர்நெட் என்றே பதில் கூறுவேன். அப்படி இன்றியமையாத  ஒன்று தான் இந்த ஈதர்நெட்.

இது முன் கூறியது போல் ட்விஸ்டட் பேர் கேபிள் கொண்டே உருவாக்கப் படுகிறது, இதில் இதுவரை 8 வகையான மாற்றங்களும் முன்னேற்றங்களும் அடைந்துள்ளது(CAT1-CAT8)

1.CAT 1


இதுவே தொலைபேசிகளை இணைக்க பயன்படுத்துவது, இதனுள்ளில் மொத்தம் 4 தனி காப்பர் வயர்கள் இருக்கும், இதில் தகவல் (DATA) பரிமாற்றம் செய்ய இயலாது

2. CAT 2

இதன் மூலமே தகவல் பரிமாற்றங்கள் ஆரம்பித்தன. இது 4 Mbps வேகத்திற்கு தகவலை பரிமாறும் திறமை படைத்தது.Mbps  என்பதை புரிந்துகொள்ள ஒரு சின்ன கணக்கு தெரிந்தால் போதும்.  நம்முடைய ரூபாயை எப்படிக் கூட்டுகிறோமோ அதாவது 10 ஒரு ரூபாயை 10 ரூபாய் எனவும்  1000 ஒரு ரூபாயை ஆயிரம்  எனவும் ஒரு மதிப்பீடு செய்கிறோம் அல்லவா , அதே போல் தகவல் பரிமாறத் தேவையான 1 மற்றும் 0 வை அளக்க இந்த முறை பயன்படுத்தப் படுகிறது.





1 பிட் (0 அல்லது 1)

10 பிட் = 1 * 10

1000 பிட் = 1 கிலோ பிட்

1000 கிலோ பிட் = 1 மெகா பிட் = 1000*1000 பிட்   
Image courtesy: Wikipedia.com

ஆக நமது கேட் 2 கேபிள் ஒரு நொடியில் 4 மெகா பிட்  அளவு கொண்ட டேட்டாவை கடத்தும் அளவுக்கு கொள்ளளவு கொண்டது. Mbps= Mega bits per second)

மற்ற கேபிள் பற்றி கீழ்கொடுக்கப் பட்டிருக்கும் அட்டவணை பார்த்துத் தெரிந்துகொள்ளவும்


இப்போது நம் பயன்பாட்டில் உள்ளது cat 5, cat 5e மற்றும் cat 6, இவற்றின் வடிவம் மற்றும் தொழில் நுட்பம் பற்றிப் பார்ப்போம்

கேட் 5, 6, 6e

இதனுள் மொத்தம் 8 தனி காப்பர் கேபிள்கள் ஜோடியாக பின்னப்பட்டிருக்கும், மொத்தம் 4 ஜோடிகள்




இப்போது இந்தக் கேபிளை கணினியுடன் இணைக்கும் பாலமாக ஈதர்நெட் கார்டு பற்றிப் பாப்போம்.

IEEE என்னும் அமைப்பு உள்கட்டமைப்பு இணைப்புகளுக்காகவே (LOCAL AREA NETWORK) உருவாக்கிய தரநிலை எண் 802. அதில் இந்த ஈதர்நெட்டிற்கு வகுக்கப் பட்டது 802.3. இந்த ஸ்டாண்டர்ட் சொல்லும் விதிகளுக்கு உட்பட்டே ஈதர்நெட் கேபிள்கள், கார்டுகள் தயாரிக்க வேண்டும்.

ஈதர்நெட் கார்டுகள் தயாரிக்கும் வேளையில் ஒரு கார்டுக்கும் மற்றொரு கார்டுக்கும் வித்யாசம் அறிந்துகொள்ளவும், ஒரு கார்டை எளிதாக அடையாளப்படுத்தவும் ...ஆதார் எண் போல் அதற்கும் ஒரு   குறியீடு அளிக்கப்பட்டு அதை உருவாக்கும்பொழுதே அதன் ரோம்(ROM) எனப்படும் மெமரியில் இணைக்கப்படும், அதன் பெயரே மேக் அட்ரஸ் (MAC ADDRESS).

மேக் அட்ரஸ் பற்றியும், பரிமாற்றத்திற்கு தேவைப்படும் சுவிட்ச்(SWITCH), ஹப்(HUB) போன்ற மற்ற சாதனங்கள் பற்றி அடுத்தப் பதிவில் காண்போம்




Tuesday, 24 July 2018

இன்டர்நெட் எனப்படும் இணையம் எப்படி வேலை செய்கிறது?

நாம் தினமும்  இணையத்தை பலதரப்பட்ட காரணிகளுக்காகப் பயன்படுத்துகிறோம்..கும்பகோணத்தில் இருந்துகொண்டு குலாலம்பூருக்கு ஒரு நொடியில் பேசிவிட முடிகிறது, உலகத்தின் எந்த மூலையும்  நம்மால் எளிதாய் தொடர்புகொள்ள முடிகிறது..இப்படிப் பட்ட இணையம் இரண்டே இரண்டு எங்களால் மட்டுமே இயங்குகிறது 0,1. இது எப்படி சாத்தியம் ஆகிறது என யோசிக்கும் உங்களுக்காகவே இந்தத் தொடர் பதிவு.


இணையம் என்பது முதலில் ஆர்ப்பா நெட் என்னும் அமெரிக்க ராணுவத்தின் பயன்பாட்டிற்காகவும்,  அவர்களுக்குள் தொடர்புகொள்ளவும்  உருவாக்கப் பட்டது

இன்டர்நெட் எப்படி வேலை செய்கிறது எனப் புரிந்துகொள்வதற்கு முன் அதன் அடிப்படை கருவிகளும் அதன் செயல் பற்றியும் தெளிவான அறிவு பெற வேண்டும், அதில் மிக முக்கியமான கருவி connecting cables,  இந்த இணைப்பு கேபிள் கொண்டே பெரும்பாலான இன்டர்நெட் வேலை செய்கிறது, இது முக்கியமாக 3 வகை உள்ளது

1. கோஅக்ஸ்(COAX)
2. பைபர் (FIBER)
3. ட்விஸ்டட் பேர்(TWISTED PAIR)

1. கோஅக்ஸ்(COAX)

இது காப்பர் எனப்படும் செம்பை கடத்தியதாக பயன்படுத்தி செயல்படும் ஒன்று, வீட்டு கேபிள் டிவியில் இந்தக் கேபிள் தான் பெரும்பாலும் பயன்படுத்தப் படும். மேற்கூறியதுபோல் பூஜியம் என்பதை இந்த செம்புக் கம்பியின் மூலம் எதுவும் கடத்தாமல் இருந்தால் அடுத்த முனையில் உள்ள இயந்திரம் புரிந்துகொள்ளும், அதுவே இந்தக் கம்பியில் +5 வோல்ட் மின்சாரம் கடத்தப் பட்டால் அதனை 1 என மறு முனையில் உள்ள இயந்திரம் புரிந்துகொள்ளும்

2. பைபர் ஆப்டிக்ஸ்


இது கண்ணாடி மற்றும் பிளாஸ்டிக்கை கடத்தியாக பயன்படுத்தி செயல்படும் ஒன்று, இதன் செயலை விளக்க ஒரு சின்ன சினிமா துணுக்கு ஒன்றுள்ளது...மம்மி படத்தில் அவர்கள் பிரமிட்குள் செல்லும்பொழுது இருட்டாக இருக்கும்...அப்போது ஒரு கண்ணாடியை தெரியாமல் திரும்புவார்கள் அதில் படும் சூரிய வெளிச்சம் இன்னொரு கண்ணாடிக்கு கடத்தி சென்று அதிலிருந்து இன்னொரு கண்ணாடிக்கு சென்று ..அந்த அரை முழுவதும் வெளிச்சம் பரவி விடும்...இதே தொழில்நுட்பம் கொண்டே இந்த பைபர் ஆப்டிக்ஸ்  செயல்படுகிறது. இதில் ஒளி ஒரு முனையில் இருந்து இன்னொரு முனைக்கு கடத்தப்பட்டால் 1 அல்லது 0 எனத் தகவலை கடத்தப் படுகிறது


3. ட்விஸ்டட் பேர் (TWISTED PAIR)


இது கோஅக்ஸ் கேபிளில் ஏற்படும் சிக்னல் இழப்பீடுகளை சரி செய்ய உருவாக்கப்பட்ட ஒன்று, இதில் இரு பிளாஸ்டிக் கொண்டு காப்பீடு(insulate) செய்யப்பட்ட காப்பர் கேபிள்கள் இரண்டு பின்னப்பட்டிருக்கும்..இப்படி பின்னப் படுவதனால் மற்ற சிக்னலின் இடைஞ்சல்கள் தவிற்கப்படும். இதில் கவசமிடப் படாத  ட்விஸ்டட் பேர்(Unshielded twisted pair) மற்றும் கவசமிட்ட ட்விஸ்டட் பேர்(shielded twisted pair)  என இருவகைப் படும்.

பெரும்பாலும் கவசமிடப் படாத ஒன்றையே நாம் அன்றாடம் பயன்படுத்துவோம், அப்படிப் பயன்படுத்தும் ஒன்றில் இன்றியமையாதது ஈதர்நெட்(ethernet)

உங்கள் கணினியிலோ, மடிக்கணினியிலோ இங்கே கொடுக்கப்பட்டுள்ள படத்தைப் போல் ஒரு துளை இருந்தால் அதுவே ஈதர்நெட் போர்ட்.


ஈதர்நெட் பற்றி அடுத்த பகுதியில் விரிவாக பாப்போம் 

Monday, 23 July 2018

கடவுச் சொல்லில் நாம் செய்யும் தவறுகள்



மற்றவர்களின் கடவுச்சொல்லை வெகு எளிதாக சில உத்திகளை வைத்துக்  கண்டுபிடித்து விடலாம்

உத்தி 1:

உங்கள் நண்பரை பற்றி நன்கு அறியவேண்டும் அவர்களின் பிறந்தநாள், தொலைபேசி எண், காதலியின் பெயர் , தாயின் பெயர், அவர் வேலை செய்யும் நிறுவனத்தின் பெயர், அவரது ஊர் இவைகளில் எதாவது ஒன்றோ அல்லது இவைகளின் கலவையோ உங்கள் நண்பர்களின் கடவுசொல்லாக இருக்க அதிகப்படியான வாய்புகள் உள்ளது

உத்தி 2:

பொதுவான கடவுசொற்கள் எடுத்துகாட்டாக password@123, iloveyou, 12345678 என கடவு சொற்க்கள் பயன்படுத்தவும் வாய்புகள் உள்ளது

அதனால் உங்களுடைய கடவுசொல்லில் மேற்குறிப்பிட்ட வகையில் கடவுச்சொல் பயன்படுத்தினால், உங்கள் நண்பர்களாலோ, வேண்டாதவர்களாலோ உங்களின் தனிப்பட்ட ஆவணங்களோ(confidential files), உரையாடல் களோ(conversations), பண ஆவர்தனங்களோ(Money Transactions) 80% களவாடப்பட வாய்ப்பு உள்ளது

உங்களின் கடவுச்சொல் மேற்குறிப்பிட்ட வகையில் இல்லாமல் குறைந்தது பதினைந்து எழுத்துகள் கொண்டதாக அமைய வேண்டும், கேப்பிடல் எழுதும்(caps lock), குறியீடுகளும்(symbols) கூடுமானவரை பயன்படுத்தவும்   

Wi-Fi கட்டமைக்கும் பொழுது நாம் செய்யும் தவறுகள்



Wi-Fi -யில் encryption என்னும் ஒரு அம்சம் உள்ளது, அது நம்முடைய செய்திகள், பரிவர்த்தனைகள் அனைத்தையும் மனிதன் படிக்கும் பொழுது புரியாத அளவிற்கு ஒரு கியை வைத்து மாற்றும்..

உதாரணத்திற்கு:

"hi " இதுதான் நீங்கள்  Wi-Fi மூலம் உங்கள் நண்பருக்கு அனுப்பும் குறுஞ்செய்தி என்றால் ..இந்த encryption என்பது அதனை சில கணக்கு மூலம் மாற்றும்.

A முதல் Z வரை நம்பர் கொடுத்துக்கொண்டே வாருங்கள்

A -1
B -2
.
.
.
.
.
Z - 26

இப்போது "hi" யில் H என்பது  8 , I   என்பது 9, இப்போது ஒரு key(கி) என்பது 3 ஆனால் இந்த நம்பர்களோடு மூன்றைக் கூட்டி வரும் எழுத்துக்களை encrypted எழுத்துக்கள் ஆகும்

H(8)I(9) --> K (11)L(12)

இதுவே  encryption -நின் எளிய விளக்கம்.

Wi-Fi கட்டமைக்கும் பொழுது நாம் இந்த encryption-ஐ சரியாக தேர்ந்தெடுக்க வேண்டும்


அதில்

1.no authentication(open)-இதைத் தேர்ந்தெடுத்தால் யார் வேண்டுமானாலும் உங்களின் இன்டர்நெட்டை உபயோகித்துக் கொள்ளலாம்

2. WEP  encryption ஹேக்கர-களால் நிமிடத்தில் ஹேக் செய்யப்படும் எளிதான ENCRYPTION


அதனால் மேற்கூறிய ENCRYPTION-களை பயன்படுத்தாமல் தவிர்க்கவும்

நம்முடைய wi-fiக்கு பாஸ்வோர்ட் தேர்வு செய்வது மிக முக்கியம், அது மிக எளிதான ஒன்றாக இருக்கக் கூடாது
(பாஸ்வோர்ட் தேர்வு செய்வது பற்றி:http://mdforu.blogspot.com/2018/07/blog-post.html)

மாதத்திற்கு ஒரு முறை பாஸ்வோர்ட் மாத்துவது நல்லது

அடுத்து Wi-Fi சிக்னல் நாம் இருக்கும் இடத்தை விட்டு வெளியே கசியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்

மேற்கூறியவற்றை செய்தாலே உங்களின் Wi-Fi பாதுகாப்புடன் இருக்கும்

Image courtesy:
https://www.howtogeek.com/wp-content/uploads/2017/08/www_1.png
https://en.wikipedia.org/wiki/Wi-Fi#/media/File:WiFi_Logo.svg